Breaking News

வெள்ள பாதிப்பு : David Hornman என்பவற்றின் உடலை மீட்டது மீட்பு குழு !

The deadbody of David Hornman was recovered by the rescue team

David Hornman என்ற 38வயது நபரின் உடலை புதன்கிழமை மதியம் Queensland மீட்பு குழுவினர் கண்டுபிடித்தனர். இதற்கு முன்னர் வடமேற்கு சிட்னியில் தனது காருடன் மூழ்கிய 25வயது மதிக்கத்தக்க நபரும் இறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

NSW Emergency Services Minister David Elliottஇது குறித்து NSW Emergency Services Minister David Elliott கூறுகையில், வெள்ளத்தால் மனித அழிவு மற்றும் பல விளைவுகளை எதிர்கொண்டுள்ளோம். எனவே மக்கள் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றார். வாரத்தில் பெய்த கனமழையால் NSW வை சுற்றியுள்ள ஆறுகளில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு வசிக்கும் 24000 பேர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறினர்.

NSW Premier Gladys Berejiklianஇது பற்றி NSW Premier Gladys Berejiklian கூறுகையில், வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் அதிகமாக உள்ளன. நாங்கள் இன்னும் அதிலிருந்து மீளவில்லை. இதற்கு காரணம் ஆறுகளில் நீரின் அளவு உயர்ந்து கொண்டு இருப்பதால் தான். வீடுகளை இழந்த மக்கள் இயல்பு நிலைக்கு திரும்ப மிக நீண்ட நாட்களாகும் என்றார்.

50 வருடத்தில் வரலாறு காணாத அளவு வெள்ளம் ஏற்பட்டுள்ளது. தொடரும் கனமழையால் அதிக பாதிப்பு ஏற்படக்கூடும். அதனால் சுமார் 60000 மக்களை பாதுகாப்பான இடத்திற்கு செல்ல மாநில அவசர சேவை எச்சரிக்கை விடுத்துள்ளது என்றார். பிரதமர் வெள்ளத்தடுப்பு நடவடிக்கை எடுக்கவும், அங்கு வெள்ளசேதங்களை ஆய்வு செய்தார்.

வானிலை ஆய்வு மையம் வரும் வாரத்தில் மழையின் அளவு குறையும் என்று கணித்துள்ளது. வெள்ள பாதிப்பு ஏற்பட்ட இடங்களில், குறிப்பாக North Richmond போன்ற பகுதிகளில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான நிவாரண பொருட்களை இராணுவம் மற்றும் அவசர நிலை ஊழியர்கள் வழங்குகிறார்கள்.

Queesland Premier Annastacia Palaszczuk பாராளுமன்றத்தில் கூறுகையில், ஆபத்து முடியவில்லை. வெள்ளம் ஏற்பட்ட பகுதிகளில் நீரின் அளவு உயர்ந்து கொண்டே தான் உள்ளது. Logan மற்றும் Albert ஆற்றில் வெள்ளம் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றார்.

மார்ச் மாதத்தில் மழையின் பதிவு பல இடங்களில் குறைவாக இருந்தாலும், பல அணைகள் மிதமான அளவு நீரை பெற்றிருந்தது. தனது கொள்ளவு 58.6% எட்டியது. இது கடந்த வாரத்தில் பெய்த மழையால் மேலும் 4.6% அதிகரித்தது.