Breaking News

ஆஸ்திரேலிய பாராளுமன்றத்தில் பாலியல் செயல்பாடுகளில் ஈடுபட்டதாக நிர்வாகிகள், எம்.பிக்கள் 6 பேர் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

Canberra பகுதியை சேர்ந்த ஒருவர் வைத்திருக்கும் பகிரங்க குற்றச்சாட்டில், பாராளுமன்ற கட்டடத்தில் சிலருடன் தான் பாலியல் உறவு வைத்துக்கொண்டதாக தெரிவித்துள்ளார்.

ஓரினச்சேர்கையாளர்களுக்கான ஒரு செயலியின் மூலமாக தனக்கு சிலருடன் நட்பு ஏற்பட்டதாகவும் அவர்கள், நாடாளுமன்றத்தில் ஊழியர்களாகவும், அரசு பணியாளர்களாக செயல்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்த புகார் குறித்து நிதி அமைச்சகம் விசாரணை மேற்கொண்டு வருகிறது.

அண்மையில் சேனல் 10 தொலைக்காட்சி வெளியிட்ட ஒரு வீடியோவில் பெண் எம்.பி.மேஜையின் மீது நிர்வாகி ஒருவர் சுய இனபம் செய்த காட்சிகள் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது..

Prime Minister Scott Morrisonஇது குறித்து கருத்து தெரிவித்த பிரதமர் ஸ்காட் மோரிசன், இந்த செயல்பாடு அருவருப்பானது, என்று சாடியுள்ளார். நிதித்துறை இவ்விவகாரம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகிறது. இத்துறையில் பணிபுரியும் மூத்த நிர்வாகியிடம் தன்னிடம் உள்ள புகைப்பட, வீடியோ ஆதாரங்கள் குறித்து எழுத்துப்பூர்வமாக தர இருப்பதாகவும், அதே நேரம் புகைப்படங்களாகவும் குறுஞ்செய்தியாக ஒப்படைக்க முடியாது என்றும் புகார்தாரர் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

அதேநேரம் புகைப்படத்தில் உள்ள அனைவருக்கும் இதில் நேரடியாக தொடர்பு உள்ளதா என்பதை விசாரணைக்கு பிறகே முடிவு செய்ய முடியும் என்றும் புகார்தாரர் தெரிவித்துள்ளார்.

Liberal Party Administrator Warren Entschஇதுகுறித்து கருத்து தெரிவித்த Liberal கட்சியின் நிர்வாகி Warren Entsch அண்மையில் வெளிவந்த சேனல் 10 வீடியோவில் வெளிவந்த ஆபாச புகைப்படங்களுக்கு பழிவாங்கும் முயற்சியே இந்த குற்றச்சாட்டை என்றும் அவர் கூறியுள்ளார். புகார்தாரரின் பின்னணி குறித்தும், நோக்கம் குறித்தும் காவல்துறையினர் விசாரிக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

ஆனால் நாடாளுமன்றத்தில் நடக்கக்கூடிய முறையற்ற செயல்களை வெளிச்சத்திற்கு கொண்டு வரவே இந்த குற்றச்சாட்டை தான் முன் வைத்ததாகவும் புகார்தார் பதிலளித்துள்ளார்.

இதுகுறித்து கருத்து தெரிவித்த நிதியமைச்சர் Simon Birmingham பாராளுமன்ற வளாகத்தில் முறையற்ற செயல்களில் ஈடுபடக் கூடியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு உடனடியாக அவர்கள் வெளியேற்றப்படுவார்கள் என்று அவர் தெரிவித்துள்ளார் பாராளுமன்றம் மாண்பு காக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளர்.