Breaking News

இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலையை கட்டுப்படுத்த தொடர்பறித்தல் , சோதனை, சிகிச்சைளை அதிகரிக்க வேண்டும் என்று பிரதமர் மாநிலங்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்..

indian Prime Minister has advised to increase testing and treatment to control the second wave of corona

இந்தியாவில் ஏற்பட்டுள்ள கொரோனா இரண்டாம் அலையை கட்டுப்படுத்துவது குறித்து மாநிலங்களின் முதல்வர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை மேற்கொண்டார். காணொளி காடசி வாயிலாக நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில் மாநிலங்களுக்கு பல்வேறு ஆலோசனைகளை பிரதமர் வழங்கினார். தொற்று பாதிக்கப்படட நபர்கள் கண்டறியப்படட பகுதிகளில் சோதனைகளை அதிகரித்து, அப்பகுதிகளில் உள்ள தகுதி வாய்ந்த நபர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

indian Prime Minister has advised to increase testing and treatment to control the second wave of corona.நாடு முழுவதும் முழு ஊரடங்கு அவசியமில்லை என்று தெரிவித்த பிரதமர், கட்டுப்பாட்டு பகுதிகளில் சோதனைகளை அதிகரித்து, சிகிச்சயளிக்கப்பட வேண்டும் அவர் வலியுறுத்தியுள்ளார். சில மாநிலங்களில் தொற்று பரவல் அதிகரித்து வருவது குறித்து அச்சப்பட வேண்டாம் என்று,தெரிவித்துள்ள பிரதமர், தொடர்பறிதல், சோதனை, சிகிச்சை ஆகியவற்றை அதிகரிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

வரும் ஏப்ரல் 11 ஜோதிபாய் பூலே மற்றும் ஏப்ரல் 14 அம்பேத்கர் பிறந்த தினங்களில் தடுப்பூசி திருவிழா நடத்தலாம் என்றும் பிரதமர் ஆலோசனை வழங்கியுள்ளார்.

இந்தியாவில் இதுவரை சுமார் 9 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 4 கோடி தடுப்புக்கள் கையிருப்பில் உள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.