Breaking News

நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் சிக்கியுள்ள மாணவர்களை விக்டோரியாவிற்கு அழைத்து வர அரசு சிறப்பு அனுமதி வழங்க வேண்டும் என்று பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Parents have demanded that the government grant special permission to bring students stranded in the state of New South Wales to Victoria.

நியூ சவத் வேல்ஸ், விக்டோரியா போன்ற மாகாணங்களில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்துவருவதால், கடுமையான ஊரடங்கை பிறப்பித்துள்ளன. மாநிலங்களுக்கிடையே பயணிக்க விரும்புவோர், கட்டாயம் விடுதிகளில் தனிமை படுத்திக்கொள்ள வேண்டும் என்ற நிபந்தனையும் உள்ளது.

Parents have demanded that the government grant special permission to bring students stranded in the state of New South Wales to Victoria,.இந்நிலையில் அரசின் நிதியுதவியுடன் செயல்படும் யான்கோ விவசாய பள்ளி நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் உள்ள லீட்டன் நகரத்தில் செயல்பட்டு வருகிறது. விக்டோரியாவில் விவசாய பள்ளிகள் இல்லை என்பதால், விக்டோரியாவில் இருந்து ஏராளமான மாணவர்கள் லீட்டனில் தங்கி படித்து வந்தனர். நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் டெல்டா வகை வைரஸ் பரவல் அதிகரித்ததை தொடர்ந்து, கடும் கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. பள்ளிகளும், மாணவர் விடுதிகளும் மூடப்பட்டுள்ளதால், யான்கோ விவசாய பள்ளியில் தங்கி படித்து வந்த மாணவர்கள் வேறு வழியில்லாமல் வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டது.

தற்போது நியூ சவுத் வேல்ஸ் பகுதியில் புற நகர் பகுதிகளான எக்ஸ்டர், யாஸ் போன்ற பகுதிகளில் நண்பர்கள் மற்றும் உறவினர்களின் வீடுகளில் இந்த மாணவர்கள் தங்கியுள்ளனர்.

விக்டோரியாவில் உள்ள தங்கள் வீடுகளுக்கு திரும்ப விரும்பும் மாணவர்கள், கட்டாயம் தனிமை படுத்துதலில் இருக்க வேண்டும் என்று விக்டோரிய சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.

Parents have demanded that the government grant special permission to bring students stranded in the state of New South Wales to Victoria..இது தொடர்பாக மாணவர்களின் ஒருவரான ஹரிட்டீயின், தாயாரான அமாண்டா கார்ணர் அரசுக்கு விடுத்துள்ள கோரிக்கையில், மாணவர்கள் என்பதால் அவர்களை சிறப்பு அனுமதியுடன் வீடுகளில் தனிமைப்படுத்திகொள்ள அனுமதி வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். அரசின் கட்டுப்பாடுகளை பின்பற்றும் அதே வேளையில், இளம் வயதினரை விடுதிகளில் தங்க வைப்பது பாதுகாப்பற்றது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

முதல் அலையின் போது நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் மாணவர்களை வீட்டுத்தனிமையில் இருக்க அனுமதி வழங்கியதாகவும் ஹரிட்டீயின் பெற்றோர் குறிப்பிட்டுள்ளனர். அதே போல அனைத்து மாணவர்களின் பெற்றோரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆனால், விதிகளில் தளர்வு கொடுக்க முடியாது என்றும், பெற்றோர் விருப்பப்பட்டால் மாணவர்களுடன் பெற்றோரும் தனிமை விடுதியில் தங்க ஏற்பாடு செய்யப்படும் என்றும் விக்டோரியா சுகாதாரத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Link Source: https://ab.co/3Di6mTk