Breaking News

ஆப்கானிஸ்தானின் காபூல் விமான நிலையத்திலிருந்து வெளியேற தவிக்கும் ஆஸ்திரேலியர்கள் : கணவரை மீட்குமாறு அரசுக்கு மனைவி கண்ணீர் கோரிக்கை

Australians stranded at Kabul airport in Afghanistan. Wife tears up for government to rescue husband

ஆப்கானிஸ்தானில் காபூல் விமான நிலையத்தில் இருந்து யாரும் வெளியேறாத வண்ணம் மோசமான நடவடிக்கைகளில் தாலிபான்கள் ஈடுபட்டு வருகின்றனர். ஏராளமானோர் ஹமீத் கர்சாய் விமான நிலையத்தில் குறைந்துள்ள நிலையில் அங்கு துப்பாக்கிச்சூடு கண்ணீர்புகை குண்டு வீச்சு உள்ளிட்டவற்றால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டு்ள்ளனர்.

இந்நிலையில் ஆப்கானிஸ்தானில் சிக்கித் தவிக்கும் ஆஸ்திரேலியர்கள் தங்களை எப்படியாவது நீக்குமாறு அரசுக்கு கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளனர். ஆஸ்திரேலிய பெண் ஒருவர் தாலிபான்களின் தாக்குதலில் தனது கணவர் காயம் அடைந்து விட்டதாகவும் அவரை மீட்டு தருமாறும், தனது கணவரை எப்படியாவது சொந்த நாட்டிற்கு அழைத்து வருமாறு அரசுக்கு தன்னுடைய கடைசி கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

Australians stranded at Kabul airport in Afghanistan. Wife tears up for government to rescue husband..ஆப்கானிஸ்தானில் இருந்த தனது தாய் தந்தையை கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில் அவர்களை சந்திப்பதற்காக தனது தங்கையுடன் ஆப்கானிஸ்தான் புறப்பட்டுச் சென்றார் முகமத். அவர்களது பெற்றோர் உயிரிழந்த நிலையில் தனது தங்கையுடன் அங்கிருந்து புறப்பட தயாராக இருந்த முகமத் தற்போது காபூல் விமான நிலையத்தில் தலிபான்களின் பிடியில் சிக்கியுள்ளார். துப்பாக்கிச்சூடு மற்றும் கண்ணீர் புகை குண்டு தாக்குதலில் காயம் அடைந்துள்ள முகமது மற்றும் அவரது தங்கையை பத்திரமாக அங்கிருந்து மீட்டு ஆஸ்திரேலியா அனுப்பி வைக்குமாறு முகமதுவின் மனைவி கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளார்.

முதலாவது விமானத்தில் இருந்து தற்போது வரை முயற்சி மேற்கொண்டு வரும் முகமது அங்கிருந்து வெளியேறுவதில் கடும் சிக்கல் நீடித்தது. அவரது தங்கையுடன் காபூல் விமான நிலையத்தில் சிக்கித்தவித்த வரும் முகம்மது கடுமையான மன உளைச்சலுக்கும் ஆளாகி இருப்பதாக கூறப்படுகிறது குழந்தைகளுடன் ஆஸ்திரேலியாவில் இருக்கும் அவரது மனைவி தான் தூக்கம் இன்றி தவித்து வருவதாக கூறியுள்ளார்.

ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேறுவதற்கு காபூல் விமான நிலையத்தில் அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து படைகள் பல்வேறு நாடுகளுக்கு உதவி வருகின்றன. அந்த வகையில் விமானங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு வருவதாகவும் 12 விமானங்களில் கூடுதலாக ஆயிரம் பேரை அனுப்பி வைப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

காபூல் விமான நிலையத்தில் ஏற்பட்டுள்ள கடும் நெருக்கடி காரணமாக மூச்சுத்திணறல் மற்றும் நீர்ச்சத்து இழத்தல் உள்ளிட்ட காரணங்களால் பல்வேறு நபர்கள் உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வருகின்றனர். காபூல் விமான நிலையத்திற்கு வெளியே நேற்று ஒரே நாளில் 7 ஆப்கானியர்கள் உயிரிழந்ததாக பிரிட்டிஷ் ராணுவம் தெரிவித்துள்ளது.

Australians stranded at Kabul airport in Afghanistan. Wife tears up for government to rescue husband.ஆஸ்திரேலியர்கள் பாஸ்போர்ட் வைத்திருந்தாலும் அவர்களிடம் விசா இல்லாத காரணத்தால் அவர்கள் விமானங்களில் செல்ல தடுக்கப்படுவதாகவும், காவல்துறை மற்றும் தாலிபான்கள் அமைத்துள்ள சோதனை சாவடிகளில் ஆஸ்திரேலியர்கள் தடுத்து நிறுத்தப்படுவதாகவும் முகமது கூறியுள்ளார். ஜெர்மனி, பிரான்ஸ், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த படைவீரர்கள் தொடர்ந்து பரஸ்பரம் பல்வேறு நாடுகளுக்கு உதவி புரிந்து வருவதாகவும், அவர்கள் மூலமே பலர் விமானத்தில் ஏறுவதற்கான வாய்ப்பு கிடைப்பதாக கூறப்படுகிறது.

ஆப்கானிஸ்தானில் சிக்கித் தவிப்பவர்களை மீட்பது நமது கடமை என்றும், மிக மோசமான நிலையில் உள்ள காபூல் விமான நிலையத்தில் இருந்து அவர்களை மீட்பதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாகவும் செனட்டர் Marise Payne தெரிவித்துள்ளார்.

Link Source: https://ab.co/3gAYoLf