Breaking News

ஆஸ்திரேலியாவின் ACT மாகாணத்தில் சமூகப்பரவல் மூலமாக12 பேருக்கு புதிதாக வைரஸ் பாதிப்பு : திரையங்குகள், பள்ளி, உடற்பயிற்சி கூடங்கள் தொற்று பரவல் மையங்களாக அறிவிப்பு

New virus infects 12 people through community outbreak in Australia ACT province. Theaters, schools, gyms announced as outbreak hubs

ACT மாகாணத்திலுள்ள Canberra நகரத்தில் மேலும் 12 பேருக்கு சமூகப் பரப்பில் மூலமாக வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் 4 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் ஒருவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Canberra- வில் 12 வயதுக்கு மேற்பட்டவர்களில் 96 சதவீதம் பேர் தகுதியானவர்கள் இதுவரை தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளனர். இந்நிலையில் சமூக பரவல் மூலமாக வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு வரும் நிலையில் தற்போது 185 பேர் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

New virus infects 12 people through community outbreak in Australia ACT province. Theaters, schools, gyms announced as outbreak hubs.கடந்த 24 மணி நேரத்தில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் 1400 பேருக்கு நெகடிவ் முடிவுகள் வந்துள்ளன. மேலும் Canberra பகுதியில் பெரும்பாலான பள்ளிகளில் வைரஸ் பாதிப்பு கண்றியப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. Charles Weston பள்ளி, Duffy Primary பள்ளி உள்ளிட்ட பள்ளிகளில் நவம்பர் 1ஆம் தேதி திறக்கப்பட்ட நிலையில் ஒரு வார காலத்தில் பலருக்கு தொற்று பரவல் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை ACT மாகாணத்தில் 20 பள்ளிகள் தோற்று பரவல் மையங்களாக கண்டறியப்பட்டு அங்கு பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு பரிசோதனைகள் மேற்கொள்ளும் நடவடிக்கைகளை சுகாதாரத் துறை மேற்கொண்டுள்ளது.

New virus infects 12 people through community outbreak in Australia ACT province. Theaters, schools, gyms announced as outbreak hubs..பள்ளிகளில் தொடர்ந்து திரையரங்குகள், உணவகங்கள் மற்றும் உடற்பயிற்சிக் கூடங்கள் ஆகியவையும் தொற்று பெறவல் மையங்களாக கண்டறியப்பட்டு இருப்பதாகவும் சுகாதாரத் துறையின் இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பகுதிகளுக்கு சென்று வந்தவர்கள் அறிகுறிகள் இருந்தாலும் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ளுமாறும் பரிசோதனை மேற் கொள்ளுமாறும் தலைமை சுகாதார அதிகாரி Kerryn Coleman கேட்டுக்கொண்டுள்ளார்.

St Andrews Village கிராமத்தில் புதிதாக தொற்று பாதிப்பு எதுவும் இல்லை என்றும் பெரும்பாலான இடங்களில் தடுப்பு ஊசி செலுத்தி கொண்டவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது என்றும் தடுப்பூசியை செலுத்தாதவர்கள் விரைந்து தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்றும் தலைமை சுகாதார அதிகாரி St Andrews Village அறிவுறுத்தி உள்ளார்.

இதனையடுத்து வைரஸ் பாதிப்பு அதிகம் உள்ள குறிப்பிட்ட இடங்களில் பகுதி நேர முடக்க நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. கட்டுப்பாடுகளை முறையாக பின்பற்றி தொற்றுப் பரவலை கட்டுப்படுத்துவதற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று சுகாதாரத்துறை பொதுமக்களை கேட்டுக் கொண்டுள்ளது.

Link Source: https://ab.co/3wUtR26