Breaking News

தெற்கு ஆஸ்திரேலியாவில் கடும் மழை காரணமாக பாலைவனப் பகுதியில் சிக்கிய பெர்த் குடும்பம் : நால்வரை மீட்க சிம்ப்சன் பாலைவனம் விரைந்தது ஹெலிகாப்டர்

தெற்கு ஆஸ்திரேலியாவின் கடைசி பகுதிகளான சிம்ப்சன் பாலைவனப் பகுதியில் கடந்த வாரம் சுற்றுலா சென்ற பெர்த் குடும்பத்தினர், கனமழை காரணமாக அந்த பகுதியிலேயே சிக்கிக் கொண்டனர். மக்கள் நடமாட்டம் அற்ற தொலைதூர பகுதியில் சிக்கிக் கொண்டதன் காரணமாக அவர்கள் மீண்டும் திரும்புவதில் சிக்கல் ஏற்பட்டது.

Perth family stranded in desert in South Australia due to heavy rains. Helicopter rushes to Simpson Desert to rescue four..இதனைத்தொடர்ந்து தெற்கு ஆஸ்திரேலிய போலீசாரின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்ட நிலையில் ஹெலிகாப்டர் மூலமாக எடுத்து குடும்பத்தினரை மீட்பதற்காக மருத்துவ குழுவினருடன் ஹெலிகாப்டரில் சென்று உள்ளது. பெர்த்தை சேர்ந்த Ori அவரது மனைவி Lindsey Zavros மற்றும் அவரது இரண்டு குழந்தைகள் உட்பட 4 பேர் தற்போது சிம்ப்சன் பாலைவனப் பகுதியில் சிக்கிக் கொண்டுள்ளனர். கடந்த வார இறுதியில் தங்களது சொந்த வாகனத்தில் அவர்கள் சுற்றுலா சென்ற நிலையில் கடும் மழை காரணமாக வாகனம் சிக்கிக் கொண்டதால் அவர்கள் அங்கேயே தவித்து வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது வானிலை மாற்றம் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ள நிலையில் கடும் வெயில் காரணமாக அவர்கள் குடிப்பதற்கு தண்ணீர் இன்றி அங்கு தவித்து வரும் நிலையில் மீட்பு குழுவினர் விரைந்து மீட்பதற்காக தாங்கள் காத்திருப்பதாக Lindsey zavros தாயார் Theo Zavros தெரிவித்துள்ளார்.

Perth family stranded in desert in South Australia due to heavy rains. Helicopter rushes to Simpson Desert to rescue four...குழந்தைகள் சிக்கிக் கொண்டுள்ள நிலையில் அவர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட வேண்டும் என்றும் அவர்களை பார்ப்பதற்காக தான் ஆவலுடன் காத்து இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். Oodnadatta பகுதியில் இருந்து 150 கிலோ மீட்டர் தொலைவில் வாகனம் சிக்கியுள்ள பகுதிக்கு சற்று அருகில் பிற்பகல் நேரத்தில் போர்ட் அகஸ்ட்டா ஹெலிகாப்டர் சென்று சேரும் என்றும், வானிலையில் கருத்தில் கொண்டு மீட்பு பணிகளை விரைந்து மேற்கொள்வதற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றும் காவல்துறை தெரிவித்துள்ளது.

Link Source: https://ab.co/3HlmCVH