Breaking News

IS பயங்கரவாத சந்தேக நபரின் இரட்டை தேசிய குடியுரிமை பறிப்பு,மோரிசன் மீது குற்றச்சாட்டு !

New Zealand Prime Minister Jacinda Ardern

IS பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு இருந்ததாக சந்தேகிக்கப்படும் நபரின் இரட்டை தேசியக் குடியுரிமையை பறித்தற்காக ஸ்காட் மோரிசனை நியூஸிலாந்து Prime Minister Jacinda Ardern கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். மேலும் மோரிசனின் இந்த நடவடிக்கையால் தான் மிகுந்த ஏமாற்றம் அடைந்துள்ளதாக அவர் வருத்தம் தெரிவித்துள்ளார்.

சிரியாவில் இருந்து சட்டவிரோதமாக துருக்கி நுழைந்த ஒரு பெண் மற்றும் அவரின் இரண்டு குழந்தைகளை துருக்கி அதிகாரிகள் கைது செய்தனர். மேலும் அவர்கள் இந்தப் பெண் ஐஎஸ் பயங்கரவாதி என்றும், இவர் New Zealand குடியுரிமை கொண்டவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு இந்தப் பெண்ணின் ஆஸ்திரேலியா குடியுரிமை திரும்பப் பெறும் வரை இவர் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து இரட்டை தேசிய குடியுரிமை பெற்றிருந்தார். அந்தப் பெண் 6 வயதில் நியூஸிலாந்தில் இருந்து சென்று ஆஸ்திரேலியாவில் குடியேறினார் பின்பு ஆஸ்திரேலியக் குடியுரிமை பெற்று அங்கே வசித்து வந்துள்ளார். அதன்பின் ஆஸ்திரேலியா பாஸ்போர்ட்டை கொண்டு சிரியாவுக்கு சென்றுள்ளார் என்று Ardern தெரிவித்தார்.

இந்தப் பிரச்சனையை ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அதிகாரிகள் இணைந்து சரி செய்ய முயற்சிப்போம் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.இந்தப் பெண்ணின் ஆஸ்திரேலியக் குடியுரிமை திரும்பப்பெறப்பட்டது தனக்கு பின்னர்தான் தெரிவிக்கப்பட்டது என்றும் Jacinda தெரிவித்துள்ளார்.

இதற்குப் பதிலளிக்கும் விதமாக ஸ்காட் மோரிசன் கூறியது என்னவென்றால் ஆஸ்திரேலியாவின் பாதுகாப்பே முதன்மையானது என்பதாகும்.தீவிரவாத குழுக்கள் உடன் தொடர்புடையவர்கள் ஆஸ்திரேலியக் குடியுரிமை பெற தகுதி இல்லாதவர்கள் என்றும், அவர்களுடைய குடியுரிமை தானாகவே திரும்ப பெற ஆஸ்திரேலியா சட்டத்தில் இடம் உள்ளது என்றும் Morrison தெரிவித்தார். மேலும் இந்த பிரச்சனையை பற்றி அவர் Ardern-னிடம் பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இப்பிரச்சனை Morrison மற்றும் Jacinda இடையே உள்ள தனிப்பட்ட உறவில் பிளவை ஏற்படுத்தியது மட்டுமல்லாமல், ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அரசுகள் இடையே மிகப்பெரிய பிளவை ஏற்படுத்தி வருகிறது. ஆஸ்திரேலியாவின் இந்த முடிவு மிகவும் தவறானது என Jascinda குற்றம் சாட்டியுள்ளார். ஒரு பெண் தனது இரண்டு குழந்தைகளுடன் காவலில் உள்ளது தனக்கு மிகுந்த கவலை அளிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.