Breaking News

Melbourne மக்கள் தங்கள் உறவுகளின் வீட்டிற்கு செல்ல அனுமதி !

விக்டோரிய அரசாங்கம் அறிவித்த புதிய சமூகத்தளர்வு விதிகளின் படி செவ்வாய் இரவு 11:59 மணி முதல் Melbourne மக்கள் தங்கள் உறவினர்களையும், நண்பர்களையும் வீட்டிற்கு சென்று பார்க்க முடியும்.

இருப்பினும் நாள் ஒன்றுக்கு ஒரு வீட்டிற்கு இரண்டு பெரியவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள், இவர்களுடன் தனிமையில் விட்டுச்செல்ல முடியாத ஒருவர் உடன் இருக்கலாம்.

இந்தச் சந்திப்பு அனுமதி எவ்வளவு காலம் நீடிக்கும் என்ற கால அவகாசம் இல்லை என்றாலும் ,மக்கள் தங்கள் சொந்த இடத்தில் இருந்து 25 கி.மீ.க்கு மேல் பயணிக்க முடியாது.

ஒரு கட்சிக்கு ஒரு தனியார் கூட்டம் மட்டுமே நிகழும். நீங்கள் சந்திக்கும் நபர் உங்களுக்கு பிறகு வேறு யாரையும் அன்று சந்திக்க முடியாது என்று Victorian Premier Daniel Andrews செவ்வாயன்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இது கேட்பதற்கு தவறகாத் தெரிந்தாலும், உண்மையில் மக்கள் தாங்கள் பாதுகாப்பாகக் கருதும் தங்கள் இல்லமே இந்த வைரஸ் பரவுவதற்கான மிக ஆபத்தான சூழல்.யார் யார் வீட்டிற்கு விருந்தினராக சந்திக்க வருகிறார்கள் என்ற பதிவை வைத்திருக்க வேண்டும் என அரசாங்கம் கேட்டுக்கொள்கிறது. Contact tracers-ஐ கண்டறிய இந்த தகவல் உதவியாக இருக்கும்.

Sharehouses-களுக்கு இந்த விதிகள் கடினமாக இருக்கும் என Premier Daniel Andrews தெரிவித்தார். தினமும் ஒவ்வொருவராக மாறி மாறி சுழற்சி முறையில் தங்க வேண்டும் என அவர் கூறினார் . பூங்காக்களுக்கு பத்து நபர்களுக்கு மேல் ஒன்றாக செல்லக்கூடாது.

விக்டோரியாவில் இரண்டாவது நாளாக புதிய தொற்று மற்றும் இறப்புகள் பதிவாகவில்லை.மார்ச் மாத தொடக்கத்தில் இருந்து தொடர்ந்து இரண்டு நாட்களாக புதிய தொற்றுகள் எதுவும் பதிவாகாதது இதுவே முதல் முறை.

Melbourne-னில் இரண்டு நாள் சராசரி 2.8 ஆக குறைந்துள்ளது. அக்டோபர் 11-24 வரை ஆறு மர்ம தொற்றுகள் . பிராந்திய பகுதிகளில் சராசரி 0.2 மற்றும் மர்ம தொற்றுகள் ஏதும் இல்லை.

விக்டோரியாவில் மொத்தம் 87 கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் உள்ளனர் . அதில் ஏழு சுகாதார பணியாளர்கள்.ஐந்து பேர் மருத்துவமனையில் உள்ளனர்.

உலகின் நீண்ட கொரோனா லாக்டவுன் முடிவுக்கு கொண்டு வரப்பட்டது என திங்களன்று Daniel Andrews உறுதிபடுத்தினார்.
Melbourne-னில் உள்ள அனைத்து சில்லறை மற்றும் விருந்தோம்பல் வணிகங்களும் மீண்டும் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மக்கள் தங்கள் வீட்டிலிருந்து எப்போது வேண்டுமானாலும் வெளியேறலாம், வெளியில் பத்து நபர்கள் வரை கூடலாம்.

ஜுன் 9 முதல் 24 மணி நேர காலப்பகுதியில் எந்த புதிய தொற்றும் பதிவாகாததால் விக்டோரியாவின் “Donut day”-ஆக கடந்த திங்கள் கிழமை வழங்கப்பட்டது.விக்டோரிய மக்கள் நோய் அறிகுறிகள் தென்பட்டால் உடனடி பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என Daniel Andrews வலியுறுத்தி உள்ளார்.

நாட்களை கடத்தாமல் அறிகுறிகள் தெரிந்த அன்றே பரிசோதனைகளை மேற்கொள்ளுங்கள் என்றும் கூறினார்.
விக்டோரியாவை முழுவதுமாக கிறிஸ்துமசிற்குள் திறக்குமாறு Premier Andrews-ஐ பிரதமர் Scott Morrison மற்றும் வணிகத் தலைவர்களும் கேட்டுக்கொண்டனர்.

ஆஸ்திரேலியாவின் கொரோனா இறப்பு எண்ணிக்கை 905 ஆக உள்ளது. விக்டோரியாவில் 817 பேர் உயிரிழந்துள்ளனர்.