Breaking News

ராணுவ விமானங்களில் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறும் காபூல் வாசிகள்: அரசாங்கத்தில் சேருமாறு பெண்களுக்கு தாலிபான் அழைப்பு

Kabul residents flee Afghanistan on military planes. Taliban call on women to join government

ஆப்கானிஸ்தான் முழுவதும் பொது மன்னிப்பு வழங்குவதாக அறிவித்துள்ளார் தாலிபான்கள் பெண்களை அரசாங்கத்தின் வந்து சேருமாறு அழைப்பு விடுத்துள்ளனர். ஆப்கானிஸ்தானை தங்களது முழு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ள தாலிபான்கள் தற்போது அடுத்த அதிபர் யார் என்பது தொடர்பான தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் 20 ஆண்டுகளுக்குப் பிறகு தாலிபான்கள் மீண்டும் அரசாங்கத்தை கைப்பற்றியுள்ள நிலையில் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாக இருப்பதாக பல்வேறு நாடுகளும் தொடர்ந்து கூறிவருகின்றன.

அதே நேரத்தில் 20 ஆண்டுகளுக்குப் பின்னர் தாலிபான்களின் வசம் ஆப்கன் கிடைத்துள்ள நிலையில் பெண்களுக்கான உரிமைகள் தலையிடப்போவதில்லை என்றும், அவர்கள் வழக்கம் போல் செயல்படலாம் என்றும் தலிபான்களின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். பெண்கள் வழக்கம் போல் அரசாங்கத்தில் இணைந்து பணியாற்றலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Kabul residents flee Afghanistan on military planes. Taliban call on women to join government.அக்னி விட்டு வெளியேறுவதாக அதிபராக இருந்த அஷ்ரப் கனி அதிகாரப்பூர்வமாக அறிவித்ததைத் தொடர்ந்து ஏராளமானோர் தங்களது நாடுகளை விட்டு வெளியேறுவதற்காக காபூல் விமான நிலையத்தில் குவிந்தனர். அங்கிருந்த விமானங்களில் ஏற ஏராளமானோர் குவிந்த நிலையில் ராணுவ விமானங்களில் அமெரிக்கா தனது துருப்புக்களையும் தூதரக அதிகாரிகளையும் அழைத்துச் செல்லும் போது அந்த விமானத்தில் அவனைச் சேர்ந்தவர்கள் ஏற முயன்றனர்.

இதனையடுத்து அங்கு நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 7 பேர் பலியானதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. இதனையடுத்து காபூல் முழுவதும் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளதாகவும், அங்கிருந்து யாரும் வெளிநாடுகளுக்குச் செல்ல வேண்டாம் என்றும் வீடுகளுக்கு திரும்ப வரும்படியும் அவர்களின் பாதுகாப்புக்கு உறுதி அளிப்பதாகவும் தெரிவித்துள்ளது.

ஆப்கானிஸ்தானில் உள்ள பெண்கள் அச்சம் கொள்ள தேவையில்லை என்றும், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான பாதுகாப்பை தாலிபான்கள் உறுதி செய்வோம் என்றும்
தாலிபான்கள் கலாச்சார பிரிவைச் சேர்ந்த Enamullah Samangani கூறியுள்ளார்.

தாலிபான்கள் அதிக அளவில் சென்று தாக்குதல் நடத்தியதாக கூறப்படும் செய்தி நிறுவனத்தில் பெண் செய்தி வழங்குனர்கள் பணிக்கு வந்துள்ளதாக அந்நிறுவனம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.

அதேநேரத்தில் ஆப்கானிஸ்தானில் தற்போது நிலவும் சூழலை கருத்தில் கொண்டு அந்நாட்டை தனித்து விட்டுவிடக்கூடாது என்று ஐநா செயலாளர் Antonio Guterres தெரிவித்துள்ளார்.

Link Source: https://ab.co/3su9PsU