Breaking News

கோவிட் 19 தடுப்பூசி நடவடிக்கைகள் : அமெரிக்காவில் இனி வரும் மாதங்களில் பூஸ்டர் தடுப்பூசி போட திட்டம்

Covid 19 Vaccination Activities. A plan to vaccinate the booster in the United States in the coming months

கொரோனா வைரஸின் தாக்கம் மிக அதிகமாக பாதிக்கப்பட்ட நாடுகளில் அமெரிக்காவும் ஒன்று அந்த வகையில் அங்கு பெரும்பாலானவர்களுக்கு இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தும் பணிகள் நிறைவு பெற்றுள்ள நிலையில், இரண்டாவது டோஸ் தடுப்பு ஊசி செலுத்தி கொண்டவர்களுக்கு எட்டு மாதங்கள் கழித்து பூஸ்டர் தடுப்பூசி செலுத்துவதற்கான திட்டம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

டெல்டா பகுதி வைரஸ் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் எந்தவிதமான கட்டுப்பாடுகளும் இன்றி அனைவருக்கும் பூஸ்டர் தடுப்பு ஊசி செலுத்தப்படும் என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. அதேநேரத்தில் பூஸ்டர் டோஸ் தேவைப்படும் அளவு குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகிறார்கள். இதுவரை அமெரிக்காவில் 168 மில்லியன் பேருக்கு இரண்டு டோஸ் தடுப்பூசியும், 200 மில்லியன் பேருக்கு பகுதிவாரியாக தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது.

ஜனவரி மாதத்திலேயே தடுப்பூசி எடுத்துக் கொண்டவர்களுக்கு பரவல் வாய்ப்பு என்பது குறைவாக இருப்பதாகவும் அது இஸ்ரோ ஒப்பிடும்போது சராசரியாக பாதிப்பு எண்ணிக்கை குறைந்து இருப்பதாகவும் ஆய்வில் தெரியவந்துள்ளது இதனை அடுத்து அமெரிக்காவில் இனிவரும் மாதங்களில் பூஸ்டர் தடுப்பூசிக்கான தேவை அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.

Covid 19 Vaccination Activities. A plan to vaccinate the booster in the United States in the coming months.அமெரிக்காவில் முதல் மற்றும் இரண்டாவது தடுப்பு ஊசியை செலுத்தி கொண்டவர்களுக்கு ஏற்பட்டிருக்கும் நோய் எதிர்ப்பு சக்தியும் பூஸ்டட் எடுத்துக் கொண்டதற்கு பிறகான நோய் எதிர்ப்பு சக்தி குறித்தும் தேசிய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் ஆய்வு செய்து வருவதாகவும் முதல் இரண்டு நூல்களில் இருந்ததைவிட மூன்றாவது பூஸ்டர் டோஸ் தடுப்பு ஊசி எடுத்துக்கொண்ட சிலருக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவதாகவும் தெரியவந்துள்ளது.

டெல்டா வகை வைரசின் பாதிப்பு நாடு முழுமைக்கும் ஆங்காங்கே பதிவாகி வருவதாகவும், அதனை கட்டுப்படுத்துவதற்கான முழு நடவடிக்கையில் இறங்கி உள்ளதாகவும் கூறப்படுகிறது. அதே நேரத்தில் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த வேண்டும் என்ற நோக்கில் தடுப்பூசி தட்டுப்பாடின்றி கிடைக்க வழிவகை செய்து அதற்கான விழிப்புணர்வும் நாட்டு மக்களிடையே ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

அமெரிக்கா தொடக்கத்திலேயே 110 மில்லியன் டோஸ் தடுப்பூசிகளை பல்வேறு உலக நாடுகளுக்கு வழங்கி விட்ட நிலையில், பூஸ்டர் தடுப்பூசிகளை வழங்குவதற்கு போதுமான அளவு கையிருப்பு உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

Link Source: https://ab.co/2VYVadD