Breaking News

உள்ளக வரலாற்றில் முக்கியமான Sydney Harbour Bridge

சிட்டினியில் உள்ள Harbour பாலம், உலகின் அகலமான Steel Arch பாலம் என்று பெருமையுடன் திகழ்கிறது. இப்பாலத்தை Iron Lung என்றும் அழைப்பர். ஏனெனில் இப்பாலம் 9 வருடங்களாக கட்டப்பட்டன. இப்பாலம் ஆஸ்திரேலியா மக்களுக்கு வேலை வாய்ப்பை வழங்கியது. இப்பாலம் கட்ட 6.25 மில்லியன் பணம் செலவானது. இந்த பாலம் கட்டுவதற்கு 800க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வேறு இடத்திற்கு மாற்றப்பட்டனர். இப்பாலம் கட்டும் பணியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபடுத்தப்பட்டனர்.
இத்தகைய சிறப்பு மிக்க பாலம் கடந்து வந்த வரலாற்று சுவடுகளை இப்போது பார்க்கலாம்.

ஐரோப்பியர்களின் வருகைக்கு முன்னர் 1788ல் Syndey Harbour பாலம் கட்டப்படுவதற்கு முன் இது Eora மக்களின் வீடாகும். பின் 1815ன் முன்பகுதியில் கட்டிடக்கலைஞர் Francis Greenway பாலம் கட்ட பரிந்துரைத்தார். 1857ல் Engineer Peter Henderson, பெரிய இரும்பு பாலத்தை Dawes Point லிருந்து Milson Point வரை கட்டமுன்மொழிந்தார். பின் இந்த பாலம் மிதக்கும் பாலம் ஆக மாறி, இறுதியாக மிகப்பெரிய பாலமாக மாறியது. இதே காலத்தில் சுரங்கம் அமைக்கவும் ஆலோசனை இருந்தது.

1890ல் Royal Commission அறிமுகப்படுத்திய 8 திட்டங்கள், மக்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. எதிர்காலத்தில் Harbour ஐ கடப்பதற்கு என்னென்ன வழிகள் உள்ளன என்பது ஆராயப்பட்டது. 1900 வரை எந்த வித முன்னேற்றமும் இல்லை. பின் 1912ல் Syndey Harbour பாலம் மற்றும் Metropolitan Railway Construction பணிக்காக Chief Engieer ஆக Dr. JJC Bradfield நியமிக்கப்பட்டார்.

New South Wales அரசு உலகம் முழுவதிலிருந்தும் பாலம் அமைப்பதற்காக டெண்டரை 1992ல் அறிவித்தது. இந்த டெண்டர் Dorman Long & Company க்கு வழங்கப்பட்டது. 1923ல் The turning of the first Sod முதன்முதலில் பாலம் கட்டும் பணி தொடங்கியது. 1926ஆம் ஆண்டு செப்டம்பர் 26ல் Harbour ன் இருபுறமும் தாங்கி பிடிக்கும் வண்ணம் Steel Work தொடங்கியது. 26 அக்டோபர் 1928ல் ஆர்ச் உருவாக்கப்பட்டது. 19 ஆகஸ்ட் 1930ல் இரண்டு ஆர்ச்ம் முதன்முறையாக இணைக்கப்பட்டது. 1932 பிப்ரவரி மாதத்தில் பாலம் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. சோதனையில் நான்கு Railway Track 96 நீராவி என்ஜின்கள் எடுத்து செல்லப்பட்டன. 3 வார இறுதியில் பாலம் பாதுகாப்பானது என்று கூறப்பட்டு, திறப்பதற்கு தயாராக இருந்தது. வாகனங்கள் செல்வதற்காக பாலம் 1932ம் ஆண்டு மார்ச் 19ம் தேதி திறக்கப்பட்டது.

மாநிலத்தலைவர் Jack Lang’s அரசு பாலம் திறக்கப்படுவதை ஒரு பொது விடுமுறை என அறிவிக்க முடிவு செய்தார். 10 மணிக்கு கொண்டாட்டம் தொடங்கியது. Captain Francis De Groot குதிரையில் வந்து விழாவை தொடங்கி வைத்தார். அப்போது அவர் கூறுகையில், இந்த பாலம் மன்னர் மற்றும் அனைத்து மக்களுக்கும் என்றார்.

1932ஆம் ஆண்டில் 11,000 வாகனம் நாள் ஒன்றுக்கு சென்றது. இன்று 160000 மேற்பட்ட வாகனங்கள் சென்று கொண்டிருக்கின்றன. இதில் 7 வாகன பாதைகள், 24 மணி நேர பஸ் லேன், ரயில் பாதைகள், நடக்கும் வழித்தடம் மற்றும் சைக்கிள் செல்ல வழிகள் உள்ளன. ஒவ்வொரு வருடமும் 4000 உடைந்த வாகனங்கள் இப்பாலத்திலிருந்து அகற்றப்படுகின்றன.

1982ல் தனது 50வது வருடத்தை Harbour பாலம் கொண்டாடியது. இந்த பாலம் சர்வதேச வரலாற்றில் பொறியாளர்களின் மைல்கல் என்று அறிவிக்கப்பட்டது. இப்பொழுது இது ஆஸ்திரேலியாவின் மிகவும் அங்கீகரிக்கப்பட்ட Landmark ஆக தற்போது உள்ளது.

Syndey Harbour பாலம் வரலாற்றில் John Job Crew Bradfield மற்றும் Jack Lang ஆகியோர் முக்கிய பங்கு வகிக்கின்றனர்.
John Job Crew Bradfield 30 வருடத்திற்கும் மேலாக Syndey Harbour Bridge உருவாக்கத்திற்கு பெரும் பங்கு ஆற்றியவர். இவருடைய கனவு சிட்டினியின் மத்தியில் ஒரு புதிய மின்சார ரயில் தொடங்கவும், நிலத்தடி Railway network தொடங்கவும், இப்பாலம் பெரும் பங்கு வகித்தது. NSW மாநிலத்தலைவராக இரண்டு முறை இருந்தவர் Jacklang. இவர் வெளிப்படையயாக பேசும் மனிதர். Bradfieldக்கு ஆதரவாகவும், பாலம் கட்ட தேவையான நிதியை திரட்ட உதவினார் என்பது குறிப்பிடத்தக்கது.