ஏப்ரல் முதல் வாரத்தில் வெளிநாடுகளில் இருந்து ஆஸ்திரேலியா திரும்பிய இரு வெவ்வேறு குடும்பத்தை சேர்ந்தவர்கள் சிட்னியில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் தனிமைபடுத்தப்பட்டு கண்காணிக்கபட்டு வந்தனர்.
இரு குடும்பத்தினரும் ஒரே விடுதியில் தங்கவைப்பட்டிருந்தாலும், அவர்களுக்கிடையே தொடர்பு ஏற்படாத வண்ணம் சுகாதாரத்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டிருந்தனர்.
இந் நிலையில் அதில் ஒரு குடும்பத்தை சேர்ந்த 3 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட முதற்கட்ட சோதனையில் அவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்படவில்லை என்பது உறுதிசெய்யப்பட்டது.
தனிமைபடுத்ததல் காலத்தில் மேற்கொள்ளப்பட்ட இரண்டாவது சோதனையில் அக்குடும்பத்தில் 2 பேருக்கு தென்னாப்பிரிக்க வகை வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பது உறுதிசெய்யப்பட்டதாக சுகாதாரத்துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து ஏப்ரல் 7 முதல் 12 தேதிகளில் வெளி நாடுகளில் இருந்த ஆஸ்திரேலியா திரும்பிய பயணிகள், Mercure Hotel ல் தனிமைபடுத்தப்பட்டிருந்தவர்கள் உடனடியாக தங்களை கொரோனா சோதனைக்கு உட்படுத்திக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்கள்.
தனியார் தங்கும் விடுதியில் பணிபுரிந்த ஊழியர்களும் பரிசோதனை செய்துக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் இதுவரை 5206 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 56 பேர் உயிரிழந்துள்ளனர். ஒருவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த 24 மணி நேரத்தில் நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் 3702 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.