Breaking News

கடந்த 10 ஆண்டுகளாக இல்லாத அளவிற்கு வெள்ள பெருக்கு-NSWவிற்கு எச்சரிக்கை !

10 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கால் NSW Mid North Coast ல் வசிக்கும் மக்கள் வெள்ளநீர் அதிகரிக்கும்போது, அங்கிருந்து வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.State emergency services விடுத்துள்ள அறிக்கையில், Kempsey CBD, Port Macquarie மற்றும் Bulahdelah ஆகிய பகுதிகளில் இருக்கும் மக்கள் உடனடியாக வெளியேற அறிவுறுத்தியுள்ளது.

commissioner carlene yorkஇது குறித்து Commissioner Carlene York கூறுகையில், வெள்ளநீர் அதிகரித்து வருவதால், மிகவும் தாழ்வான பகுதியில் உள்ள மக்கள், வெளியேறும் நிலை உள்ளது. அங்கு வசிப்பவர்களும், பார்வையாளர்களும் வெள்ள பாதிப்பை எதிர்கொள்ளவும் அதற்கு தேவையான பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கவும் கேட்டுக் கொள்ளப்படுவதாகவும் தெரிவித்துள்ளது.

மேலும் அவர் கூறுகையில், மக்கள் அனைவரும் விழிப்புடன் வானிலை நிலைமையை கண்காணிக்குமாறு கூறியுள்ளார். அதிதீவீர வெள்ளம் எவ்வாறு வரும் என்று கூற முடியாது. அதனுடைய தீவிரம், விரைவாக அனைத்தையும் அழித்து விடும். மேலும் பல பகுதிகள் வெள்ளநீரின் உயர்வால் பாதிப்பு உள்ளாகிறது. அதனால் அந்த பகுதியில் இருப்பவர்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்லுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.

Extreme levels of flood danger were announcedமேலும் Bowraville மற்றும் Macksville பகுதிகளில் ஆறுகளில் நீர் உயர்ந்து கொண்டு இருப்பதால் அந்தப்பகுதியில் வெள்ளம் வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.Port Stevens ல் உள்ள அவசர குழுவினர், நிலச்சரிவு மற்றும் மரங்கள் வீழ்வதின் காரணமாக பல சாலைகள் மூடப்பட்டுள்ளன. மேலும் வெள்ள தடுப்பு எச்சரிக்கையாக மணல் மூட்டைகளால் சாலை மற்றும் வீடுகளை பாதுகாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். வெள்ளத்தால் சாலைகள் மிகவும் மோசமடைந்துள்ளது.

சாலைகள் பார்க்கும்பொழுது மிகவும் பயமாக உள்ளது என பெற்றோர்கள் கூறியதால், Newman senior college மூடப்பட்டுள்ளது. பலவிதமான வெள்ள எச்சரிக்கைகள் ன் பல இடங்களில் வரும் வாரங்களிலும் தொடரும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Minister for Police and Emergency Services, David Elliott கூறுகையில், மக்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்குமாறும், தன்னார்வலர்கள் உங்கள் உயிரை காப்பாற்ற போராடி வருகிறார்கள். அதனால் எந்தவிதமான முட்டாள்தனமான காரியத்தை செய்யவேண்டாம். வெள்ளநீர் இருக்கும்போது வாகனமோ, அதில் நடக்கவோ எந்த விதமான விபரீத முயற்சியும் எடுக்காதீர்கள். இது என்னுடைய வேண்டுகோள் என்று கூறியுள்ளார்.