Breaking News

இரண்டரை ஆண்டுகள் கடந்து Toyah Cordingley கொலை வழக்கில் திருப்பம் !

twist in the Toyah Cordingley murder case -Suspicion on health worker

2018ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் உள்ள Cairns நகரத்தில் Toyah Cordingley என்ற பெண் கொலை செய்யப்பட்டார். இந்த கொலை சம்பந்தமான விசாரணையை இந்தியாவிடம் ஒப்படைக்க மத்திய அரசு ஒப்புதல் தெரிவித்து கையெழுத்திட்டுள்ளது. இதனையடுத்து இந்த வழக்கு விசாரணையை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும்.

Toyah Cordingley mother Vanessa Gardinerஇந்த சம்பவம் குறித்த இறந்த பெண்ணின் தாயார் Vanessa Gardiner கூறுகையில், 24 வயதான தன்னுடைய மகள் far-north Queensland உள்ள Wangetti கடற்கரைக்கு செல்லவும், அங்கு தன்னுடைய நாயை நடைப்பயிற்சிக்கு அழைத்து செல்லவும் ஆசைப்பட்டார். தனது மகளை அறிந்த அனைவராலும் அவர் நேசிக்கப்பட்டார். அவள் சிறந்த மகிழ்ச்சியான பெண். இந்நிலையில் 2018ம் ஆண்டு அக்டோபர் 21ம் தேதி கொலை செய்யப்பட்டார். ஒரு இந்திய நபர் இந்த கொலைக்கு காரணமாக இருக்கலாம் என்றும் கூறினார். இரண்டரை ஆண்டுகள் கடந்தும், இது குறித்து முழுமையான விசாரணையை போலீசார் மேற்கொள்ளப்படவில்லை. இதுவே ஒரு அரசியல்வாதியின் மகளாக இருந்திருந்தால் இந்த வழக்கை விரைவாக முடித்திருப்பார்கள் .நாங்கள் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம் என்றார்.

twist in the Toyah Cordingley murder case -Suspicionஇதற்கு பதிலளிக்கும் விதமாக, ஆறு மாதங்களுக்கு பிறகு போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளது. போலீசாருக்கு, சுகாதார ஊழியர் Rajwinder Singh மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது. ஏனெனில் கொலை நடந்த பிறகு, அவர் தன் குடும்பத்தாருடன் இல்லை. மேலும் தன்னுடைய நாட்டிற்கு விரைந்து சென்றதாகவும் தெரியவந்துள்ளது.இந்த காரணத்தால் Rajwinder Singh தான் குற்றவாளி என்ற அர்த்தம் கிடையாது. இந்த கொலையை பற்றி விசாரணைக்கு அவர் உதவ முடியும் என்று போலீசார் நம்புகின்றனர்.இந்தியாவிடம் ஒப்படைக்கும் நபர் இவரா என்பதை அட்டர்னி ஜெனரல் துறை உறுதியாக கூறவில்லை.தற்போது இந்த கொலை பற்றிய விசாரணை நடந்து கொண்டு இருக்கின்றது.