Breaking News

தமிழகத்தில் நடந்து முடிந்த 16வது சட்டமன்ற தேர்தலில் 71.79 சதவீத வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

According to the Election Commission, 71.79 percent of the votes were cast in the 16th Assembly elections held in Tamil Nadu

தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. கொரோனா தொற்று பரவல் அச்சுறுத்தலுக்கு மத்தியில் தேர்தல் ஆணையம் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தது. இந்த தேர்தலில் சுமார் 6 கோடியே 26 லட்சம் வாக்காளர்கள் தகுதி பெற்றிருந்ததினர்.

election commission tamil nadu said 71.79% 1இவர்களில் நேற்று மாலை நிலவரப்படி 71.79 சதவீத வாக்குகள் பதிவானதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிதவித்துள்ளார்.

தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் தேர்தல் அமைதியாக நடைபெற்றாலும், ஒரு சில இடங்களில் கட்சியினரிடையே மோதலும் அரங்கேறியது.

கோவையில் வாக்குச்சாவடியை பார்வையிட வந்த திமுக வேட்ப்பாளர் சேனாதிபதிக்கு அதிமுகவினர் எதிர்ப்பு தெரிவித்ததால் அப்பகுதியியல் அதிமுக திமுகவினரிடையே மோதல் ஏற்பட்டது.

தேனி பகுதியில் வாக்குச்சாவடியை பார்வையிட வந்த எம்.பி. ரவீந்திரநாத்துக்கு திமுகவினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் திமுக அதிமுகவினர் இடையே மோதல் நிலவிய நிலையில், எம்.பி ரவீந்திரநாத்தின் கார் கண்ணாடி உடைக்கப்பட்டது.

election commission tamil naduகோரோனா தொற்றின் காரணமாக இந்த தேர்தலில் 88,937 வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. கடந்த தேர்தலில் சுமார் 66 ஆயிரம் வாக்கு பதிவு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. இத்தேர்தலில் 80 வயதை கடந்தவர்களும், மாற்றுத்திறனாளிகளும் தபால் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தவர்கள் மாலை 6 மணி முதல் 7 மணி வரை வாக்களிக்க சிறப்பு ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் செய்திருந்தது.

தேர்தல் முடிவடைந்த நிலையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாக்குச்சாவடி முகவர்கள் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டு வாக்கு எண்ணும் மையங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டது.

tamil nadu election police and army securityஇம்மையங்களை சுற்றி துணை ராணுவ படையினர் மற்றும் உள்ளுவர் காவல் துறையினர் இணைந்து மூன்றடுக்கு பாதுகாப்பு மேற்கொண்டுள்ளனர். மின்னணு வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.

2016 சட்டமன்ற தேர்தலில் 74 சதவீத வாக்குகள் பதிவான நிலையில், இத்தேர்தலில் 72 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. வாக்கு எண்ணிக்கை மே 2 ஆம் தேதி நடத்தப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளது.