பப்புவா நியூ கினியா நாட்டை சேர்ந்த 77 நபர் ஒருவருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டதால், கடந்த மார்ச் 28ஆம் தேதி குயின்ஸ்லாந்து மாநிலத்திற்கு கொண்டுவரப்பட்டார்.
உடல்நிலை மோசமான நிலையில் இருந்த அவரை உடனடியாக பிரிஸ்பேனில் உள்ள Redcliff மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
பப்புவா நியூ கினியா, ஆஸ்திரேலியாவின் அண்டை நாடு என்பதால் அந்நாட்டுக்கு தேவையான உதவிகளை ஆஸ்திரேலியா செய்யும் என்று, மாநில சுகாதாரத் துறை அதிகாரி Dr.Jennette Young தெரிவித்துள்ளார். இது தொடர்பாக கருத்து தெரிவித்த முதன்மை சுகாதாரத்துறை அதிகாரி டாக்டர் young கோவிட் தொடர்பான அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
குயின்ஸ்லேண்ட் மாகாணத்தில் போடப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் வரும் வியாழக்கிழமை முடிவடைய உள்ளது.
குயின்ஸ்லேண்ட் மாகாணத்தில் இதுவரை 1491 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
6 பேர் உயிரிழந்த நிலையில் 70 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.