Breaking News

இந்தோனேசியாவில் குழந்தைகளிடையே கொரோனா தொற்று வேகமாக பரவுவதால் மிகுந்த பாதுகாப்புடன் இருக்குமாறு மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

Doctors warn to be extra careful as corona infection is spreading fast among children in Indonesia.

இந்தோனேசிய சுகாதாரத்துறையால் வெளியிடப்பட்ட அதிகாரப்பூர தகவலின் படி கடந்த 2021 ஜூன் மாதம் வரை அந்நாட்டில் சுமார் 250000 குழந்தைகள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது இந்தோனேசியாவின் மொத்த பாதிப்பில் 12.5% என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களில் 676 குழந்தைகள் கொரோனாவின் காரணமாக உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்த குழந்தைகளில் 50% பேர் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் என்பது குறிப்பிடத்தக்கது.

Doctors warn to be extra careful as corona infection is spreading fast among children in Indonesia.,.இது தொடர்பாக கருத்து தெரிவித்த குழந்தை மருத்துவர் அமன் புலுங்கான், குழந்தைகளிடம் தொற்று பரவுவதை தடுப்பதற்கு நாம் தவறிவிட்டதாக தெரிவித்துள்ளார். குழந்தைகளிடையே அதிகரித்து வரும் கொரோனா தொற்று பரவல் எண்ணிக்கை பெற்றோர்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்த செலைய ஆஷ்யா என்பவர், மருத்துவர்களின் அறிவுரையை கேட்காமல் ,மருத்துவமனையில் இருந்த தன் பெற்றோரை காணச் சென்றதாகவும் தற்போது தன்னுடைய 4 குழந்தைகளுக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டதாகவும் வேதனை தெரிவிக்கிறார்.

தொற்று பாதிக்கப்பட்டு உடல் நிலை பாதிப்பு ஏற்பட்டும் தான் மருத்துவமனைக்கு செல்ல தயங்கியதாகவும், ஆனால் தன்னுடைய 18 மாத குழந்தைக்கு மூச்சு திணறல் ஏற்பட்டவுடன் தான் மருத்துவமனைக்கு செல்ல நேர்ந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Doctors warn to be extra careful as corona infection is spreading fast among children in Indonesiaநல்வாய்ப்பாக தன்னுடைய குழந்தைக்கு உரிய நேரத்தில் சிகிச்சை கிடைத்ததால் அவன் உயிரிபிழைக்க நேர்ந்ததாகவும், இல்லாவிட்டால் தன்னுடைய தவறுக்கு தன் குழந்தை உயிரிழந்த நேரிட்டு இருக்கும் என்றும் அவர் வேதனை தெரிவிக்கிறார். இது வரை 13 மில்லியன் பேருக்கு இந்தோனேசியாவில் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாகவும், சுமார் 276 மில்லியன் பேர் தடுப்பூசி செலுத்த தகுதி பெற்றிருப்பதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள சுகாதாரத்துறை 12-17 வயதுடையவர்களுக்கு சினோவாக் தடுப்பூசி செலுத்தப்படுவதாகவும், 28 நாட்கள் இடைவெளியில் இந்த தடுப்பூசி செலுத்தப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Doctors warn to be extra carefulஅதே நேரத்தில் கொரோனா தொற்றில் இருந்து பாதிக்கப்பட்டு மீண்டு வரும் குழந்தைகளிடம் நீண்ட கால பாதிப்பு தென்படுவதாகவும், அவர்களிடம் ஒரு சோர்வு தென்படுவதாகவும் மருத்துவர் டெண்டா தெரிவித்துள்ளார். ஆனால் குழந்தைகளிடையே ஏற்படும் தொற்று பரவலை கட்டுப்படுத்த பெற்றோர்களிடையே கட்டுப்பாடு அவசியம் என்று கூறும் மருத்துவர்கள், அவசியமின்றி வெளியே வரவேண்டாம் என்றும் வலியுறுத்துகின்றனர்.

Link Source: https://ab.co/2UBrvpE