Breaking News

ஐக்கிய அரபு அமீரகத்துடன் ராணுவ ரீதியிலான உறவை பலப்படுத்தும் ஆஸ்திரேலியாவின் முயற்சிக்கு மனித உரிமை ஆர்வலர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

ஐக்கிய அரபு அமீரகத்திற்கான ஆஸ்திரேலிய தூதர் Heidi Venamore, ஐக்கிய அரபு அமீரகத்தின் பாதுகாப்பு துறை அமைச்சரான Mohammed bin Ahmed Al Bowardi ஐ சந்தித்து பேசினார்.

இந்த சந்திப்பின் போது இரு நாடுகளுக்கிடையேயான ராணுவ ரீதியிலான உறவை வலுப்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது.

ஆஸ்திரேலிய தூதருடன், மத்திய கிழக்கு நாடுகளுக்கான ரியர் அட்மிரல் மைக்கல் ரோத்வெல்லும் உடன் இருந்தார்.

இது தொடர்பாக வெளியிடப்பட்ட செய்தி குறிப்பில் ஐக்கிய அரபு அமீரகத்தின் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டு திட்டங்கள் குறித்தும் பாராட்டப்பட்டதாகவும், இந்த பிராந்தியத்தில் ஒரு முன்னோடி அரசாக செயல்படுவதற்கு வாழ்த்து தெரிவித்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியாவின் இந்த நடவடிக்கைக்கு மனித உரிமை செயற்பாட்டாளர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

ஏமனில் ஹவுத்தி கிளர்ச்சியாளர்களுக்கு எதிரான கூட்டுப்படை பல்வேறு போர் குற்றங்களில் ஈடுபட்டு வருவதாகவும், அதற்கு ஐக்கிய அரசு அமீரகத்தின் ஆதரவு இருப்பதாகவும் மனித உரிமை செயற்பாட்டாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

Human rights activists have expressed dissatisfaction with Australia's efforts to strengthen military ties with the United Arab Emiratesஏமனில் நடைபெற்ற பல்வேறு ராணுவ நடவடிக்கைகளை ஐக்கிய அரபு அமீரகமே முக்கிய காரணம் என்றும், மனித உரிமை மீறலுக்கு அந்நாடு துணை நிற்பதாகவும் அவர்கள் சாடுகின்றனர். மேலும் ஏமனில் அப்பாவி மக்கள் துன்புறுத்தப்படுவதாகவும், சர்வதேச மனித உரிமை சட்டங்கள் மீறப்படுவதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்த கருத்தையும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். இது போன்ற குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ள ஐக்கிய அரபு அமீரகத்துடன் ராணுவ ரீதியான ஒப்பந்தத்தை ஸ்திரப்படுத்துவது என்பது சர்வதேச சமூகத்திற்கு தவறான
செய்தியை வழங்குவதாக அமையும் என்று மனித உரிமை ஆர்வலரான Sophie McNeil குறிப்பிடுகிறார்.

அதே நேரம் அரபு அமீரகத்தின் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டு குறித்து ஏதேனும் விவாதிக்கப்பட்டதா என்பது குறித்து எந்த விவரமும் வெளியிடப்படவில்லை.

இரு நாடுகளுக்கிடையே ஏற்பட்ட ராணுவ உடன்படிக்கையின் அங்கமாக ஐக்கிய அரபு அமீரகத்தில் நவீன இயந்திர துப்பாக்கி தயாரிப்பதற்கு கான்பெராவை சேர்ந்த நிறுவனம் உதவி வருவது குறிப்பிடத்தக்கது.

Link Source: https://ab.co/3r66xew