Breaking News

கொரோனா பெருந்தொற்று காலத்தில் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் செயல்பாடு மிக மோசமாக இருந்ததாக கூறப்பட்ட குற்றச்சாட்டுக்கு அவர் மறுப்பு தெரிவித்துள்ளார்.

He has denied allegations that British Prime Minister Boris Johnson's performance was very bad during the Corona epidemic.

பிரிட்டனில் கொரோனா தொற்று ஏற்பட்டு சுமார் 1,39,000 பேர் உயிரிழந்துள்ளனர். ஐரோப்பியாவில் உள்ள நாடுகளில் பிரிட்டன் தான் கொரோனாவால் அதிக உயிரிழப்பை சந்தித்துள்ளது. மேலும் உலக அளவில் 5 ஆம் இடத்தில் உள்ளது.
இது குறித்து கருத்து தெரிவித்த முன்னாள் அரசு ஆலோசகருமான டாமினிக் கம்மிங்கஸ், கொரோனா பெருந்தொற்றை போரிஸ் ஜான்சன் தலைமையிலான அரசு மிக மோசமாக கையாண்டதாகவும், சுகாதாரத்துறை செயலாளர் மேட் ஹான்காக் ஒரு பொய்யர் என்றும் கடும் குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார்.

இதற்கு பதிலளித்த இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் , டாமினிக் கூறிய குற்றச்சாட்டை மறுத்துள்ளார். மேலும் அவர் கூறுவது முற்றிலும் உண்மைக்கு புறம்பானது என்றும் கூறியுள்ளார்.

முதியோர் இல்லங்களில் தொற்று பரவல் ஏற்படுவதை தடுக்கவும், ஆயிரக்கணக்கானவர்கள் பாதிக்கப்படுவதை தடுக்க அரசு தவறிவிட்டதாக டாமினிக் கூறியுள்ளார். மேலும் சுமார் 10000 பேரை பரிசோதனை செய்யாமலேயே வெளியேற்றியதாகவும் அவர் குற்றச்சாட்டு முன்வைத்துள்ளார்.

He has denied allegations that British Prime Minister Boris Johnson's performance was very badduring the Corona epidemic.இதற்கு பதிலளித்த போரிஸ், கொரோனா பெருந்தொற்று காலத்தில் அந்த வைரஸ் குறித்து கிடைத்த அனைத்து தகவல்களின் அடிப்படியில் முடிவுகள் எடுக்கப்பட்டதாகவும், உயிரிழப்புகளை தடுக்கவும், மக்கள காக்கவும் தேசிய சுகாதார சேவை மூலமாக அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

முதியோர் இல்லங்களை பாதுகக்கப்பட்ட பகுதிகளாக கடந்த மே 2020 அறிவித்ததாகவும், சுகாதாரத்துறை செயலாளர் ஹேன்காக் கூறியுள்ளார்.

பிரிட்டனில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களில் 3ல் இருவருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டிருப்பதாக பிரதமர் போரிஸ் தெரிவித்துள்ளார். மேலும் ஜூன் 21 ஆம் தேதிக்கு வணிக நடவடிக்கைகளை தொடங்கவும் பிரிட்டன் அரசு திட்டமிட்டுள்ளது.

Link Source: https://bit.ly/3fM3jYy