Breaking News

விக்டோரியாவில் தொற்று பரவல் அதிகரிப்பால், பல மாநிலங்களில் பயணாளர்களுக்கு கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாநிலத்தில் அண்மையில் 26 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டறியும் முயற்சி முடுக்கிவிடப்பட்டுள்ளது. மேலும் தொற்று பரவல் சங்கிலி தொடர்பை துண்டிப்பதற்காக முழு ஊரடங்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் விக்கோரியாவில் இருந்து வருபவர்களுக்கு கட்டாய தனிமைபடுத்துதல், பரிசோதனை போன்ற கட்டுப்பாடுகளை மாநிலங்கள் அறிவித்துள்ளன.

As the spread of the epidemic in Victoria increased, restrictions on travelers were intensified in many statesஅதன்படி குயின்ஸ்லாந்து, தெற்கு ஆஸ்திரேலியா, மேற்கு ஆஸ்திரேலியா, நியூ சவுத் வேல்ஸ், டாஸ்மேனியா போன்ற மாநில அரசுகள் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி விக்டோரியாவில் இருந்து குயின்ஸ்லாந்து மாநிலத்துக்கு வருபவர்கள் 14 நாட்கள் கட்டாய தனிமைபடுத்துதலுக்கு உட்படுத்தப்படுவார்கள் என்று குயின்ஸ்லாந்து பிரிமீயர் Annastacia Palaszczuk உறுதிபட தெரிவித்துள்ளார்.

குயின்ஸ்லாந்தை பாதுகாக்க இது அவசியமான முடிவு என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்திலும் , விக்டோரியாவில் இருந்து வருபவர்கள் வீட்டு தனிமையில் இருக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே வெளியே செல்ல நியூ சவுத் வேல்ஸ் வாசிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தெற்கு ஆஸ்திரேலியாவில் விக்டோரியாவில் இருந்து வருபவர்கள் 14 நாட்கள் தனிமைபடுத்துதல் அவசியம் என்று கூறியுள்ளது.

மேற்கு ஆஸ்திரேலியா, விக்டோரியாவில் இருந்து வருபவர்கள் அத்தியாவசிய அனுமதி பெற்றிருந்தால் மட்டுமே அவர்களை அனுமதிக்க முடியும் என்று தெரிவித்துள்ளது.
அதே போல வடக்கு பிராந்தியம், டாஸ்மேனியா போன்றவை விக்டோரியாவில் இருந்து வரும் பயணிகளுக்கு 14 நாட்கள் தனிமைபடுத்துதல் அவசியம் என்று உத்தரவை பிறப்பித்துள்ளது.

Link Source: https://bit.ly/34qmrWX