Breaking News

ஆஸ்திரேலியாவில் ஆபரேஷன் Ironside – க்கு பிறகு திட்டமிட்ட குற்ற குழுக்கள் நேருக்கு – நேர் சந்திக்க அதிகம் வாய்ப்புள்ளது : குற்றவியல் நிபுணர்கள் கூறும் பரபரப்பு தகவல்கள்

Crime groups meet face-to-face after Operation Ironside in Australia Criminal experts

ஆஸ்திரேலியாவில் திட்டமிட்ட குற்றங்களை அரங்கேற்றும் குழுக்களை கண்டறிவது தொடர்பான ஆபரேஷன் Ironside கடந்த மூன்று ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. FBI உதவியுடன் நடைபெற்ற இந்த நடவடிக்கையில் பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ளன. குற்றச் சம்பவங்களில் தொடர்புடைய 200 குற்றவாளிகள் தொடர்பான விவரங்கள் கண்டறியப்பட்டுள்ளன. ANOM மொபைல் செயலி மூலமாக என்கிரிப்ட் செய்யப்பட்ட தகவல் பரிமாற்றத்தை செய்து வந்து இருப்பதும், இதன் மூலம் திட்டமிட்ட குற்றங்களை சங்கிலித் தொடராக இவர்கள் அரங்கேற்றி வந்ததும் குற்றவியல் நிபுணர்களின் ஆய்வில் தெரியவந்துள்ளது.

இந்நிலையில் இந்த மொபைல் செயலி வழியாக மறைமுகமாக ஆஸ்திரேலியா பெடரல் போலீஸ் கண்காணிப்பு பணிகளை தொடங்கியுள்ளது. குற்றச் சம்பவங்களில் தொடர்புடையதாக கண்டறியப்பட்ட குற்றவாளிகள் அனைவரும் என்கிரிப்ட் செய்யப்பட்ட மொபைல் போன்களையே தங்கள் தொடர்புக்கு பயன்படுத்தி வந்துள்ளதும் கண்டறியப்பட்டுள்ளது.

Crime groups meet face-to-face after Operation Ironside in Australia, Criminal expertsஇந்த வகை தொழில்நுட்பம் தொடர்பான தகவல்கள் பரிந்துரைகளை தாங்கள் எதிர்பார்ப்பதாகவும், பல்வேறு குற்றவாளிகளிடம் ஏராளமான தகவல்களை தாங்கள் பெற்றிருப்பதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். மூன்று ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில் இந்த விவகாரத்தில் காவல்துறையால் இடைமறிக்கப்பட்ட நேரங்களை குற்றவாளிகள் மிக அதிகமாக பயன்படுத்திக் கொண்டதாகவும், அந்த நேரத்தில் தொடர்பில் கோளாறு ஏற்பட்டதாகவும் குற்றவியல் நிபுணர் Goldsworthy தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரங்கள் கண்டறியப்பட்டுள்ள நிலையில் அவர்கள் தங்கள் தகவல் தொடர்பில் பயன்படுத்தும் தந்திரங்களை மாற்றியமைக்க கூடும் என்றும் ஆனால் தங்கள் செயல்பாடுகளை அவர்கள் ஒருபோதும் மறைக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.

Crime groups meet face-to-face after Operation Ironside in Australia.Criminal expertsதிட்டமிட்ட குற்றங்களின் பின்னணியில் செயல்படும் குற்றவாளிகளை கண்டறிந்து அவர்களின் செயல்பாடுகளை பார்த்தபோது தாங்கள் மிகுந்த அதிர்ச்சி அடைந்துவிட்டதாகவும், இதுபோன்று இதற்கு முன்னர் கண்டதில்லை என்றும் ஆஸ்திரேலிய பெடரல் போலீஸ் கமிஷனர் Reece Kershaw கூறியுள்ளார். இந்த விவகாரம் குறித்து நீதிமன்றத்தில் அறிக்கையாக தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், மருந்து கடத்தல், திருட்டு, கொலை, கொலை மிரட்டல் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் தொடர்புடைய குற்றவாளிகளின் விவரங்களும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

சம்பந்தப்பட்ட குற்றவாளிகளின் மறைமுக தகவல் தொடர்பில் தற்போது இடையூறு ஏற்பட்டுள்ளதால் குறிப்பிட்ட மொபைல் செயலி மற்றும் தொழில்நுட்பத்தை காவல்துறையினர் இடைமறித்த தொடங்கியுள்ளனர். இதனையடுத்து சம்பந்தப்பட்ட திட்டமிட்ட குற்றங்களை அரங்கேற்றும் குழுவினர் இனி தாங்கள் நேருக்கு நேராக சந்திக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்வார்கள் என்று போலீஸ் கமிஷனர் தெரிவித்துள்ளார்.

Link Source: https://ab.co/3v9Wy8K