Breaking News

விக்டோரியாவில் இருந்து குயின்ஸ்லாந்து சென்று சென்ற பெண்ணுக்கு கொரோனா தொற்று : பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளும் நியூ சவுத் வேல்ஸ் சுகாதாரத்துறை

குயின்ஸ்லாந்தில் உள்ள ஒரு உணவகத்திற்கு தொற்று பாதித்த 44 வயது பெண் கடந்த மாதத்தில் இரண்டு நாட்களில் மூன்று முறை வருகை தந்துள்ளார். இதுமட்டுமின்றி நியூ சவுத் வேல்ஸ் பகுதியில் திரையரங்கம், கேளிக்கை விடுதி, கஃபே, தெர்மல் பாத் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு அவர் சென்று வந்துள்ளார். விக்டோரியாவில் ஊரடங்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது அடுத்து அவர் அங்கிருந்து புறப்பட்டு மெல்போர்ன் சென்றுள்ளார். இதனையடுத்து நியூ சவுத் வேல்ஸ் சுகாதாரத்துறை பல்வேறு முன்னெச்சரிக்கை அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.

Corona infection in a woman who traveled from Victoria to Queensland. New South Wales Health Department taking various precautionary measures.ஜூன் 1-ஆம் தேதி முதல் 5ஆம் தேதி வரை அவர் பயணம் செய்த பல்வேறு இடங்கள் தொற்று பாதிப்புக்கு உள்ளாகும் இடங்களாக கண்டறியப்பட்டுள்ளன. மத்திய மேற்கு நியூ சவுத் வேல்ஸ் இல் இருந்து டப்போ மற்றும் மோரி வழியாக அவர் குயின்ஸ்லாந்து சென்றுள்ளார். இந்நிலையில் அவர் சென்று வந்த இடங்களின் பட்டியலை வெளியிட்டு உள்ள நியூ சவுத் வேல்ஸ் சுகாதாரத்துறை, இந்த பகுதிகளில் குறிப்பிட்ட நாட்களில் சென்ற அனைவரும் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ளுமாறும் பரிசோதனை செய்துகொண்டு முடிவுகள் வரும் வரை காத்திருக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளது.

இதனிடையே ஜூன் 1-ஆம் தேதி முதல் ஐந்தாம் தேதி வரை அப்பெண் சென்று வந்த இடங்கள் மற்றும் நேரங்கள் குறித்த பட்டியலை சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்தி வருவதாகவும் அவர் சென்று வந்த இடங்களில் தகவல்கள் கிடைக்கும் பட்சத்தில் அவை உடனடியாக பதிவு செய்யப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

Corona infection in a woman who traveled from Victoria to Queensland. New South Wales Health Department taking various precautionary measuresதொற்று பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் சன்ஷைன் கோஸ்ட் பல்கலைக்கழக மருத்துவமனையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனுமதிக்கப்பட்டுள்ளதாக குயின்ஸ்லாந்து தலைமை சுகாதார அதிகாரி Jeanette Young கூறியுள்ளார். குறிப்பிட்ட நாட்களில் அவருடன் அதிக அளவில் அவர் காரில் பயணம் செய்து இருப்பதாகவும் நெருக்கமாக இருந்த காரணத்தால் முன்னெச்சரிக்கையாக அவரை தனிமைப்படுத்தி மருத்துவமனையில் அனுமதித்து பரிசோதனை மேற்கொண்டிருப்பதாகவும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

சன்ஷைன் கோஸ்ட் பகுதியில் உள்ள Caloundra -வில் தனது கணவர் மற்றும் குடும்பத்துடன் வசித்து வரும் பெண், ஊரடங்கு நாட்களில் மாகாணத்திற்கு உள்ளேயே பல இடங்களுக்கு பயணித்துள்ளார்.

Link Source: https://ab.co/3cw5KxG