Breaking News

விக்டோரியாவில் தளர்த்தப்பட்ட மற்றும் மாற்றப்பட்ட முக்கிய கட்டுப்பாடுகள் !

Daniel Andrew

நள்ளிரவு முதல் விக்டோரியாவில் கொரோனாவை தடுக்க எடுக்கப்பட்ட எளிதான முக்கிய கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டுள்ளன .
விக்டோரியாவின் மாநிலத் தலைவர் Daniel Andrew இன்று நள்ளிரவு முதல் 5 நாள் ஊரடங்கு முடிவிற்கு வரும் என்று அறிவித்தார். அனைத்து கட்டுப்பாடுகளிலும் நீக்கப்படும். மக்கள் தங்கள் வீட்டிலிருந்து 5 கி.மீ. வரை உள்ள இடங்களுக்கு மட்டுமே செல்ல அனுமதி. முகக்கவசம் அணிவது கட்டாயம். ஒரு வாரத்திற்கு வெள்ளிக்கிழமை வரை 5 பார்வையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.

பொதுக்கூட்டங்களில் 20 மட்டுமே கலந்து கொள்ள அனுமதி உண்டு. வியாழக்கிழமை முதல் பள்ளிகள் திறக்கப்படும். பொது மற்றும் தனியார் துறைகளில் 50% ஊழியர்களுடன் வேலையை தொடங்கலாம். மருத்துவமனைக்கு பார்க்க செல்லும் பார்வையாளர்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது.

மதக்கூட்டங்கள் மற்றும் விழாக்கள் முன்பு இருந்த கட்டுப்பாடுகளுடன் மீண்டும் தொடங்கலாம். கல்யாணம் மற்றும் இறுதி சடங்குகளில் பங்கேற்க எண்ணிக்கை வரம்பு கிடையாது. ஆனால் அந்த இடத்தின் அளவை பொறுத்தது. விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கு மீண்டும் தொடங்கலாம். சில்லறை வியாபாரம் மற்றும் விருந்தினரை வரவேற்பது போன்றவை முன்பு இருந்த கட்டுப்பாடுகளுடன் தொடரும்.

இது குறித்து Chief Medical Officer Professor பால் கெல்வி கூறும்பொழுது, எவ்வளவு அதிகமான மக்கள் தடுப்பூசிகளை செலுத்தி கொள்கிறோர்களோ, நாம் நமது பழைய நிலைக்கு திரும்ப முடியும். நோய் தொற்று ஏற்பட வாய்ப்புள்ளவர்கள், முதியோர் ஆகியோருக்கு முன்னுரிமை வழங்கப்படும். Astrazeneca மற்றும் Pfizer இந்த இரண்டு தடுப்பூசிகளும் ஹிரில் பயன்படுத்தப்படுகிறது. இரண்டும் ஒரே மாதிரியாக செயல்படுகிறது. இரண்டுமே பாதுகாப்பானது. இவை உயிரை காப்பாற்றுகிறது என்றார்.

தெற்கு ஆஸ்திரேலிய மாநிலத் தலைவர் Stevan Marshall கூறும்பொழுது, கொரோனாவிற்கான Pfizer தடுப்பூசி திங்கட்கிழமை முதல் தொடங்கப்படும். இந்த வார இறுதிக்குள் 4000 தடுப்பூசிகள் வந்தடையும். முதல் 3 வாரங்கள் 12000 தடுப்பூசியை செலுத்துவதே அரசின் குறிக்கோளாக உள்ளது என்றார்.

மேலும் அவர் கூறும்பொழுது, 27% ஆஸ்திரேலியர்கள் தடுப்பூசி போடாமல் இருப்பது வருத்தமாக உள்ளது. முதலாளிகள் தனது ஊழியர்களை தடுப்பூசி போட்டுக் கொள்ள ஊக்குவிக்குமாறு கேட்டுக்கொண்டார். இது குறித்து Hunt கூறுகையில், அனைத்து ஆஸ்திரேலியர்களுக்கும் Covid 19 தடுப்பூசி செலுத்துவதே அரசின் நோக்கம். Phase 1A ன் கீழ் தனிமைப்படுத்தப்பட்ட எல்லை தொழிலாளர்கள், முன்கள சுகாதார பணியாளர்கள், வயதானவர்கள், ஊனமுற்றோர் ஆகியோருக்கு முன்னுரிமை வழங்குவதை உறுதி செய்வோம் என்றார்.