Breaking News

விக்டோரியன் எல்ஜிஏ-வில் கொரானா வைரஸ் விதிமீறல்கள்..அதிகரிக்கும் குற்றங்கள்..அதிகாரிகள் எச்சரிக்கை !

கடந்த ஆண்டு விக்டோரியாவில் கொரோன வைரஸ் கட்டுப்பாடுகளை மீறியதாக 37,000 பேர் அடையாளம் காணப்பட்டதாக மாநிலத்தின் சமீபத்திய குற்ற புள்ளிவிவரங்கள் வெளிப்படுத்தி உள்ளன. 2020-ம் ஆண்டு தலைமை சுகாதார அதிகாரியின் உத்தரவை மீறியதாக 37,505 வழக்குகளை விக்டோரியா காவல்துறை பதிவு செய்தது. மேலும் 80 சதவீதம் குற்றங்கள் மாநிலத்தின் கடுமையான ஊரடங்கின் போது அதாவது ஜூலை மற்றும் அக்டோபர் மாதங்களுக்கு இடையில் நிகழ்ந்துள்ளன.

CSA Chief Statistician Fiona Dowsleyஇயக்கம் மற்றும் அன்றாட செயல்பாட்டின் மாற்றங்கள் Covid-19 கட்டுப்பாடுகளின் போது குற்றபோக்குகளை பாதித்துள்ளது, மேலும் CSA தலைமை புள்ளிவிவர நிபுணர் Fiona dowsley கூறுகையில், புதிய Covid-19 தொடர்பான குற்றங்களை அறிமுகப்படுத்தியதாக கூறப்படும் குற்றவாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக விக்டோரியா போலீசாரால் தெரிவிக்கப்பட்டதை சுட்டிக்காட்டினார்.

கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் டிசம்பர் வரை அதிக எண்ணிக்கையிலான Covid-19 குற்றங்களை கொண்ட பகுதிகளாக, மெல்போர்னில் 5079 பேரும்,Hume 2050 பேரும், Greater Dendenong 2031 பேரும் அடங்குவர்.

Corona virus violations in Victorian LGA 1விக்டோரியா-NSW எல்லைக்கு அருகிலுள்ள Queenscliffe and Dowong போன்ற கடலோரப் பகுதிகள் சிறந்த முறையில் நடந்துகொண்ட சமூகங்களில் ஒன்றாகும். மேலும் இவை இரண்டும் இரண்டு கொரானா வைரஸ் குற்றங்களை மட்டுமே பதிவு செய்தது. முகக்கவசம் அணிய தவறியது, கட்டுப்பாடுகளை மீறுவது, பயணத் தடைகள் இருந்த போதும் சரியான காரணமின்றி ஒரு பகுதியை விட்டு இன்னொரு பகுதிக்கு செல்வது மற்றும் தனிமைப்படுத்த அறிவுறுத்திய போதிலும் அதை மீறியது போன்றவை மாநிலம் முழுவதும் அடங்கும்.

காவல்துறை மீது Covid-19 விதிகளை சீரற்ற முறையில் செய்ததாக குற்றச்சாட்டுகள் இருந்தபோதிலும் பிரதமர் James Merlino இன்று காலை வழங்கப்பட்ட அபராதங்களை ஆதரித்தார். மேலும் நான் விக்டோரியா போலீசாரையும் முழுமையாக ஆதரிக்கிறேன் எனவும் கூறினார். பின் Covid-19 கட்டுப்பாடுகளை அமல்படுத்திய பின் சொத்து மற்றும் மோசடி குற்றங்களில் 12.1 சதவீதம் குறைந்த போதிலும், குற்றச் சம்பவங்கள் சிறிது அதிகரித்துள்ளது.

இதுவரை பதிவு செய்யப்பட்ட அதிகமான வன்முறை சம்பவங்கள் போலீசில் பதிவாகி உள்ளன அதில் 9.4 சதவீதம் அதிகரித்து 92,521 ஆக உயர்ந்துள்ளது. மேலும் விக்டோரியாவை விட மேல்போனில் குற்றங்கள் அதிகரித்துள்ளன.இதுகுறித்து Pearson கூறுகையில், எங்கள் சமூகத்தில் பலர் வன்முறையை அனுபவித்ததில் நான் மிகவும் வருத்தம் அடைகிறேன், எனக் கூறினார்.