Breaking News

பழங்குடியின மக்களுக்கு எதிராக நடைபெறும் அநீதிகளை விசாரிக்க விசாரணை கமிஷன் !

Commission of Inquiry to Investigate Injustices Against Indigenous

ஆஸ்திரேலியாவில் முதன்முறையாக விக்டோரியாவில் பழங்குடி மக்களுக்கு எதிராக நடந்த, நடந்து கொண்டிருக்கும் அநீதிகள் குறித்து விசாரணை நடத்தப்பட உள்ளது.

உண்மை என்பதன் பொருளான Wemba Wemba/Wamba Wamba என்ற Yoo-rrook நீதி ஆணையம், முழு அதிகாரத்துடன் தனது பணியை அடுத்த மாதம் தொடங்கும். இந்த விசாரணை கமிஷன், சமூக, அரசியல், கலாச்சாரம் மற்றும் பொருளாதாரத்தில் பழங்குடியின விக்டோரியர்களுக்கு எதிராக நடத்தப்படும் அநீதிகள் குறித்து விசாரிக்கும். இந்த விசாரணை கமிஷனை விக்டோரியா தான் முதன்முதலாக உருவாக்கியுள்ளது.

James Merlinoமாநிலத் தலைவர் James Merlino கூறுகையில், இந்த ஆணையம் அந்த மக்களுக்கு உகந்ததாக இருக்கும். இது நீண்ட காலம் ஆகும். இது மக்கள் கடந்த காலத்தில் பட்ட கஷ்டத்தையும், வலியையும் இப்பொழுது வாழும் வாழ்க்கையில் தெரிகிறது. இங்கு உண்மையோ, நீதியோ இல்லாமல் எதையும் செய்ய முடியாது. இதை நாங்கள் செய்து முடிக்கும் வரை, அனைத்து விக்டோரியர்களையும் வேற்றுமையை அகற்றி உண்மையாக ஒற்றுமையுடன் இருக்க வைக்க முடியாது.

விக்டோரியாவின் முதல் மக்கள் பேரவையின் இணைத் தலைவராக இருக்கும் Aunty Geraldine Atkinson கூறுகையில், இது பழங்குடி மக்களுக்கு கஷ்டமாக இருக்கும். இந்த செயல் ஒரு அதிர்ச்சி தரக்கூடிய அனுபவமாக இருக்கும். இதை செய்யும் குடும்பத்தை பற்றி கவலைப்படுகிறேன் என்றார்.

Commission of Inquiry to Investigate Injustices Against Indigenous Peoplesவிக்டோரியாவின் முதல் மக்கள் பேரவையின் உறுப்பினரான Marcus Stewart கூறுகையில், பழங்குடியின மக்களுக்கு நேர்ந்த இனப்படுகொலைகள் பற்றிய உண்மையை வெளியே கூற வேண்டும். மக்களை விசாரணைக்கு ஒன்றாக்கப்பட வேண்டும். நாம் அனைவரும் ஒன்றாக இணைந்து இந்த பயணத்தை தொடர்ந்தால் ஒரு புதிய நமக்கான விக்டோரியாவை உருவாக்க முடியும் என்றார்.

பழங்குடி மக்களுக்காக மாநிலத்தின் முதல் மற்றும் ஒரே ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட அமைப்பு இது. ஒரே மாநிலமாக, ஒரே தேசமாக நாம் இதை சிறப்பாக செய்ய வேண்டும். அவர்களுடைய பிரச்னையை கேட்பது மட்டும் இல்லாமல் அதற்கான அர்த்தமுள்ள நடவடிக்கையையும் எடுப்பதாகும். இதற்கு முன் நடந்ததை சமாளித்தது போல இப்பொழுது நடப்பதையும் நாம் சமாளிக்க வேண்டும் என்றார்.