Breaking News

கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்ட பிறகு கேப்டன் சர் டாம் மூர் மரணம் !

கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்ட பிறகு கேப்டன் சர் டாம் மூர் மரணம் !

கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்ட பிறகு கேப்டன் சர் டாம் மூர் மரணமடைந்தார் ..அவருக்கு வயது 100.இவர் கொரோனா தொற்றின் போது நிதி திரட்டி பல பிரிட்டிஷ் இதயங்களை வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது .இவரது மரண செய்தியை கேட்ட அனைவரும் பேரதிர்ச்சியில் உள்ளனர். இங்கிலாந்து முழுவதும் இவருக்கு இருந்து அஞ்சலி செலுத்தப்பட்டது.

சுகாதார சேவை தொண்டு நிறுவனங்களுக்காக கிட்டத்தட்ட £33 million திரட்டிய திரு மூர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டார் .பிறகு தெற்கு இங்கிலாந்தில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு பிறகு காலமானார் என்ற தகவல் வெளிவந்துள்ளது .அவரது மகள்கள், Hannah Ingram-Moore மற்றும் Lucy Teixeira ,அவரது வாழ்க்கையின் கடைசி ஆண்டு, தன்னலமற்ற முயற்சிகளுக்காக சர்வதேச புகழ் பெற்றார் என்று கூறினார்கள்.

மேலும் அவரது மகள்கள் கூறுகையில் ,அவர் கனவு கண்ட விஷயங்களை மட்டுமே அனுபவித்தார்.அவருடைய வாழ்க்கையின் கடைசி மணி நேரங்களை அவர்கள் ஒன்றாக நினைவுபடுத்தி கொண்டனர் .நாங்கள் சிரிப்பையும் கண்ணீரையும் ஒன்றாக பகிர்ந்து கொண்டோம் என்று கூறினார்கள்.

பிரதமர் Boris Johnson ,இவரை ஒரு தேசிய உத்வேகம் மட்டுமல்ல, உலகத்திற்கான நம்பிக்கையின் கலங்கரை விளக்கம்” என்றும் “வார்த்தையின் உண்மையான அர்த்தத்தில் ஒரு ஹீரோ” என்று புகழாரம் சூட்டியுள்ளார்.இரண்டாம் உலகப் போரின் இருண்ட நாட்களில் அவர் சுதந்திரத்திற்காக போராடினார்.பிறகு பல போராட்டத்தில் ஈடுபட்டு அனைவரையும் ஒன்றிணைத்தார் என்று கூறியுள்ளார் .

கடந்த மாதம் 31ஆம் தேதி அன்று கொரோனா பாதிக்கப்பட்டு மூச்சுவிட சிரமம் ஏற்பட்டதால் ஞாயிற்றுக்கிழமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.ஏற்கனவே நிமோனியாவுக்கு சிகிச்சை பெற்று வருவதால் அவருக்கு தடுப்பூசி போடப்படவில்லை என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

இரண்டாம் உலகப் போரின்போது ஆசியாவில் பணியாற்றிய திரு மூருக்கு பிரிட்டிஷ் இராணுவம் அஞ்சலி செலுத்தியது.ஏப்ரல் 30 ஆம் தேதி திரு மூரின் 100 வது பிறந்தநாளையொட்டி சுமார் 140,000 பேர் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் செய்திகளை அனுப்பியுள்ளனர்.அவர் ஒரு குறுகிய காலத்திற்கு பல இதயங்களை வென்றுள்ளார் , அவர் ஒரு நம்பமுடியாத தந்தை மற்றும் தாத்தா, அவர் எங்கள் இதயங்களில் என்றென்றும் உயிரோடு இருப்பார் என்று அவரது மகள்கள் கூறியுள்ளனர்.

இவரது மறைவு செய்தியை அறிந்த அனைவரும் தங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.