Breaking News

புதிய COVID-19 தொற்று ஏதும் இல்லை ஊரடங்கு முடிவுக்கு வரும் என்ற நம்பிக்கையில் மக்கள் !

Mark McGowan

மேற்கு ஆஸ்திரேலியாவில் எந்த ஒரு புதிய COVID-19 தொற்றும் ஏற்படவில்லை. அதனால் இந்த ஊரடங்கு முடிவுக்கு வரும் என்ற நம்பிக்கை மக்களுக்கு ஏற்பட்டுள்ளது. Sheraton Four Pointsன் போது அந்த காவலர் நோய் வாய்ப்பட்ட விருந்தினருக்கு மருந்து கொடுத்தபோது முகக்கவசம் அணிந்திருந்தாரா என்ற கேள்விக்கு பதில் இன்னும் வெளிவரவில்லை.

இது குறித்து , McGowan கூறுகையில், ஐந்து நாள் ஊரடங்கில் முதல் நாளான்று metropolitan Perth, the Peel region மற்றும் South West பகுதிகளில் 16,490 பேர் சோதனை செய்து கொண்டனர். தானாக முன் வந்து மக்கள் சோதனை செய்து கொண்டதில் இம்மாநிலம் பெருமை கொள்கிறது. இந்த முடிவு தன்னை உற்சாகப்படுத்துவதாகவும், ஆனால் ஊரடங்கு முன்னதாக முடிவடையும் என்பது சாத்தியமில்லை. மக்கள் கஷ்டப்படுவதை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. இது தொடர்ந்து இருக்க நான் விரும்பவில்லை என்று கூறினார்.

அந்த காவலருடன் நெருங்கிய தொடர்பில் இருந்த 151 பேர் மற்றும் சாதாரணமாக தொடர்பில் 68 பேர் கண்டுபிடிக்கப்பட்டனர். அவர்களுக்கு சோதனை செய்ததில் 104 பேருக்கு தொற்று இல்லை என்பது உறுதியாகியுள்ளது. சமீபத்தில் திரும்பிய 2 வெளிநாட்டு பயணிகளின் மரபணு சோதனையின் முடிவு அந்த காவலருடன் தொடர்புடையதாக இருந்தது. ஜனவரி 24ம் ஆம் தேதி காவலர் பணியில் இருந்தபோது, அங்கே தங்கியிருந்த பயணிகளில் ஒருவருக்கு மருந்து வழங்கியதாக தெரிகிறது.

Health Minister Roger Cook கூறுகையில், காவலர் முகக்கவசம் அணிந்திருந்தாரா? என்பது குறித்து எங்களால் விசாரிக்க முடியவில்லை. மக்கள் தங்களுடைய அறைகளில் இருக்கும்போதும், காவலர்கள் வெளியே கண்காணிக்கும்போதும் முகக்கவசம் அணிய தேவையில்லை. யாரேனும் அறையை விட்டு வெளியே வந்தால், காவலர் தங்களை பாதுகாத்துக் கொள்ள முகக்கவசம் அணிய வேண்டும்.

காவலர் ஜனவரி 30ஆம் தேதி வரை உடல்நிலை சரியில்லை என்பதை கூறவில்லை. அவருக்கு அறிகுறிகள் தெரியும்போது, Covid – 19 பரிசோதனை செய்ய வலியுறுத்தப்பட்டார். அன்று இரவே தோற்று உறுதி செய்யப்பட்டது . கடைசியாக ஜனவரி 27 அன்று ஹோட்டலில் பணிபுரிந்தார். உடல்நிலை சரியில்லாத சமயத்தில் தனிமைப்படுத்தி கொள்ளவில்லை. இரண்டு நாள் கழித்து GP clinic, Nedlandsல் சென்றார்.

வெளிநாட்டிலிருந்து வரும் யாரும் Sheraton ஹோட்டலில் அனுமதிக்கப்பட மாட்டார்கள். வரும் நாட்களில் வெளியே செல்லவிருந்தவர்களும், மற்றொரு சோதனை முடிவு வெளிவரும் வரை அங்கேயே இருப்பார்கள். சமீபத்தில் வெளியே சென்றவர்களும் தொடர்பு கொள்ளப்பட்டு அவர்கள் சோதனை செய்து கொள்ளவும் தனிமைப்படுத்தி கொள்ளவும் அறிவுறுத்தப்படுவார்கள்.

WA’s health incident coordinator Robyn Lawrence கூறுகையில், காவலர் எல்லாவற்றையும் சரியாக செய்தார். தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் எந்த பிரச்னையும் இல்லை. மீறல் எவ்வாறு நடந்தது என்று போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர். ஊரடங்கு பகுதியில் உள்ள மக்கள் தேவையான வேலைகளுக்கு மட்டும் வீட்டை விட்டு வெளியே செல்ல வேண்டும். Metropolitan testing clinics இரவு 10 மணி வரை திறந்திருக்கும்.

எதிர்க்கட்சி தலைவர் Zak Kirkup கூறுகையில், அரசு 24 மணி நேரமும் சிகிச்சை மையங்கள் திறக்க வேண்டும். மேலும் ஹோட்டலில் வேலை செய்வோர் இரண்டாம் வேலைக்கு செல்வதை தடுக்க வேண்டும் என்றார். மேலும் McGowan கூறுகையில், ஹோட்டல் ஊழியர்களுக்கு 40% ஊதியம் அதிகரித்து அவர்களை இரண்டாம் வேலைக்கு செல்வதை அரசு தடுத்துள்ளதாக கூறினார்.