Breaking News

இன்றைய முக்கிய செய்திகள் ஒரு பார்வை !

china corona

சீனாவில் வௌவால்களால் பரவும் புது வகை கொரோனா :

தெற்கு சீனாவில் வெளவால்களால் புது வகை கொரோனா தோற்று பரவிவருவதாக ஆய்வில் தகவல் வெளிவந்துள்ளது. 24 கொரோனா வைரஸ் மரபணுக்களை வரிசைப்படுத்தி,அவற்றில் நான்கு புதிய வைரஸ்கள் SARS-CoV-2 உடன் நெருக்கமாக தொடர்புடையவை என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

பக்கவிளைவுகள் இல்லாத 17 மில்லியன் டோசஸ் :

17 million doses without side effectsஐரோப்பா முழுவதும் பதினேழு மில்லியன் அஸ்ட்ராசெனெகா தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன, மேலும் இரத்த உறைவு கோளாறுகளுக்கு தொடர்பு இருப்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை என்று ஆஸ்திரேலியாவின் தலைமை மருத்துவ அதிகாரி தெரிவித்துள்ளார்.இது குறித்து Dr Paul Kelly கூறுகையில்,AstraZeneca தடுப்பூசிகள் மீது தலைமை மருத்துவ அதிகாரிகள் மற்றும் மருத்துவ துறையில் உள்ளவர்களுக்கு நம்பிக்கை உள்ளதாக கூறினார்.

சிறையில் அடைக்கப்பட்ட சிட்னியை சேர்ந்த Blake Davis :

Blake Davis from Sydney imprisonedசாமுராய் வாளால் கொலை செய்ததற்காக Blake Davis என்ற சிட்னியை சேர்ந்தவருக்கு, 2 வருடம் 9 மாதம் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.Jett McKee என்பவர் Blake Davisஇன் காதலியான Hannahவை துப்பாக்கி முனையில் மிரட்டியதாகவும்,அதனால் ஆத்திரம் அடைந்த Blake, இந்த கொலையை செய்ததாகவும் தகவல் வெளிவந்துள்ளது.பெயில்லில் இருக்கும் காலகட்டத்தில் 2 முறை தற்கொலை செய்துகொள்ள Blake முயற்சித்ததாகவும் ,மனதளவில் மிகவும் பாதிக்கப்பட்டதாகவும் கூறுகின்றனர்.தீவிரவிசாரணைக்கு பிறகு இந்த சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

அடுத்த வாரத்தில் இருந்து நடைமுறைக்கு வரும் GP தடுப்பூசிகள் :

GP vaccines effective from next weekவெளிநாடுகளில் இருந்த சரியான நேரத்தில் Pfizer தடுப்பூசிகள் வந்தடைவதாகவும் ,அதனால் தடுப்பூசி மையங்களுக்கு சரியாக விநியோகம் செய்யப்படுவதாக Dr Kelly கூறியுள்ளார்.அதே போல் AstraZeneca தடுப்பூசிகளும் அணைத்து மாநிலங்களும் பிரதேசங்களும் விநியோகம் செய்யப்படுவதாக கூறினார்.ஆஸ்திரேலியாவின் முன்னணி மருத்துவ அமைப்புகள் அனைத்தும் AstraZeneca தடுப்பூசி பாதுகாப்பானது என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

NSW-வில் கொலை குற்றத்திற்காக கைது செய்யப்பட்ட நபர் :

Person arrested for murder in NSWவடக்கு கடற்கரையில் நியூகேஸில் அருகே மாக்வாரி ஏரியில் ஒரு சிறுவன் சந்தேகத்திற்கிடமான விதத்தில் மரணம் அடைந்ததால் .சந்தேகத்தின் பேரில் போலீசார் ஒருவரை கைது செய்தனர்.தற்போது இது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பிரேசில்-இல் தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு :

Brazilகடந்த வாரத்தில் மட்டும் ,ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக புள்ளிவிவரங்களின்படி,12,818 புதிய இறப்புகள் மற்றும் 464,000க்கும் மேற்பட்ட புதிய வழக்குகள் பதிவாகிவுள்ளது.அமெரிக்காவையும் விட அதிகமாக கொரோனா உள்ளன

குயின்ஸ்லாந்து கொரோனா செய்திகள் :

Queensland Corona Newsகுயின்ஸ்லாந்தில் எந்த ஒரு புது கொரோனா பாதிப்பும் பதிவாகவில்லை என்று Premier Annastacia Palaszczuk கூறியுள்ளார்.அடுத்த இரண்டு வாரங்களில் முன்னணி தொழிலாளர்களுக்கு கொரோனா தடுப்பூசிகள் வழங்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.