Breaking News

விக்டோரியாவில் புதிதாக ஒருவருக்கு தொற்று கன்றியப்பட்டுள்ளதால், மெல்போர்னில் அடுக்குமாடி கட்டடத்தில் வசிபவர்கள் அனைவரும் தனிமை படுத்தப்பட்டுள்ளனர்.

All residents of an apartment building in Melbourne have been isolated as a newcomer has been infected in Victoria.

அண்மையில் நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் இருந்து விகடோரியா திரும்பிய ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேரில் 3 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதன் காரணமாக அவர்கள் வசித்து வந்த அடுக்கு மாடி குடியிருப்பு பகுதி தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

All residents of an apartment building in Melbourne have been isolated as a newcomer has been infected in Victoria,இக்குடும்பத்தை சேர்ந்தவர்கள் நியூ சவுத் வேல்ஸ் பகுதியில் உள்ள சிவப்பு மண்டலத்தில் இருந்து திரும்பியதால் மேற்கொள்ளப்பட்ட முதல் சோதனையில், இவர்களுக்கு தொற்று ஏற்படவில்லை என்ற முடிவு வந்துள்ளது. 24 மணி நேரத்தில் குடும்பத்தில் ஒரு சிலருக்கு அறிகுறிகள் தென்பட்டது தெரியவந்ததை தொடர்ந்து மீண்டும் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் அவர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.

இக்குடும்பத்தினர் பயணம் செய்த மெல்போர்ன் விமான நிலையம் கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்படவில்லை என்றாலும், விமானத்தில் பயணம் செய்தவர்கள் அனைவரும் ஏற்கனவே தனிமை படுத்தப்பட்டுள்ளனர்.

நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் இருந்து வருபவர்கள் தங்களை கட்டாயம் தனிமை படுத்திக்கொள்ள வேண்டும் என்கிற கட்டுப்பாடு அமலில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

All residents of an apartment building in Melbourne have been isolated as a newcomer has been infected in Victoriaமேலும் மேல்போரினின் வடமேற்கு பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்த 150 தனிமை படுத்தப்பட்டுள்ளனர். தொற்று பாதித்தவர்கள் சிலர் இந்த குடியிருப்புக்கு வந்ததால் இந்த நடவடிக்கையை சுகாதாரத்துறை மேற்கொண்டுள்ளது. Ariele அடுக்குமாடி குடியிருப்பு கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டதால் வியாழக்கிழமை இந்த கட்டடத்திற்கு வந்தவர்கள் தங்களை தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என்று சுகாதாரத்துறையினர் வலியுறுத்தியுள்ளனர்.

மேலும் கட்டுப்படுத்தப்பட்ட பகுடியிகளுக்கு வந்தவர்கள் தங்களை தனிமை படுத்திக்கொள்ள வேண்டும் என்று சுகாதாரத்துறை வலியுறுத்தியுள்ளது.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள கமாண்டர் ஜெரோன் வெய்மர், சுகாதாரத்துறை தரப்பில் வெளியிடப்படும் வழிகாட்டு நெறிமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

தொற்று பரவியுள்ள கட்டுப்படுத்தப்பட்ட பகுடியிகளில் இருந்து விகடோரியாவிற்கு திரும்பியவர்கள் சுமார் 9410 பேர் தனிமை படுத்தப்பட்டுள்ளனர்.

Link Source: https://bit.ly/3AXhbcj