Breaking News

தடுப்பூசி செலுத்திவிட்ட நாடுகள் கூடுதல் தடுப்பூசிகளை ஆர்டர் செய்வதை நிறுத்த வேண்டும் : மற்ற நாடுகளுக்கும் தடுப்பூசி கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என உலக சுகாதார நிறுவனம் வேண்டுகோள்

Vaccinated countries should stop ordering additional vaccines. WHO urges other countries to make vaccines available

ஜெனிவாவில் நடைபெற்ற உலக சுகாதார மாநாட்டில் பேசிய உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் Tedros Adhanom தடுப்பூசி குறித்து தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். தடுப்பூசி செலுத்தி ஓரளவு தன்னிறைவை கண்ட நாடுகள் கூடுதலாக Bosster தடுப்பூசிகளை ஆர்டர் செய்து வருவது மற்ற ஏழை நாடுகளுக்கு தடுப்பூசி கிடைக்காமல் செய்யும் என்றும் அவர் கூறியுள்ளார்.

டெல்டா பகுதி வைரஸ் மிக வேகமாக பரவி வரும் நிலையில் இன்னும் பெரும்பாலான நாடுகளில் சுகாதார பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்த முடியாத நிலை உள்ளதாகவும் அவர் வருத்தம் தெரிவித்துள்ளார். உலகின் பெரும்பாலான நாடுகளில் அமைதியை சீர்குலைத்து உள்ள கொரோனா வைரஸின் தாக்கம் வேகமாக அதிகரித்து வருவதாகவும் உயிரிழப்பு எண்ணிக்கைகள் அச்சமூட்டுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Vaccinated countries should stop ordering additional vaccines. WHO urges other countries to make vaccines available,.இந்தியாவில் முதலில் கண்டறியப்பட்ட அதிவேக டெல்டா வகை வைரஸ் தற்போது 104 நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளதாகவும் இது தற்போது புதிய அலையாக பல நாடுகளில் பாதிப்பை ஏற்படுத்தி வருவதாகவும் Tedros Adhanom கூறியுள்ளார். அதே நேரத்தில் தடுப்பூசி வினியோகம் சம்மற்ற முறையிலும், ஏற்றத்தாழ்வோடும் நடைபெற்று வருவதாகவும், பல்வேறு நாடுகள் லட்சக்கணக்கான பூஸ்டர் தடுப்பூசிகளை தொடர்ந்து ஆர்டர் செய்து வருவதாகவும் இதன் காரணமாக ஏழை நாடுகளுக்கு தடுப்பூசி கிடைக்காத நிலை உருவாகும் என்றும் அவர் வருத்தம் தெரிவித்துள்ளார்.

மாடெர்னா, ஃபைசர் தடுப்பூசி நிறுவனங்கள் தொடர்ந்து ஏற்கனவே அதிக அளவில் தடுப்பு ஊசி செலுத்தப்பட்ட நாடுகளுக்கு கூடுதலாக பூஸ்டர் தடுப்பூசி களை வழங்க முன் வருவதாகவும், ஆனால் மத்தியதர மற்றும் ஏழை நாடுகளுக்கு தடுப்பூசி வழங்குவதில் ஆர்வம் செலுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

ஆப்ரிக்கா உள்ளிட்ட நாடுகளில் இன்னும் சுகாதார முன்கள பணியாளர்கள், பாதிப்புக்கு உள்ளாகும் நிலையில் உள்ளவர்கள் என பலருக்கு தடுப்பூசி கிடைக்காத நிலை உள்ளதாகவும், இதற்கு தடுப்பூசி விநியோகத்தில் நிலவும் ஏற்றத்தாழ்வே முக்கிய காரணம் என்றும் Tedros Adhanom தெரிவித்துள்ளார்.

Vaccinated countries should stop ordering additional vaccines. WHO urges other countries to make vaccines available.இதனிடையே பூஸ்டர் தடுப்பூசிகள் இன்னும் உரிய ஆய்வு முடிவுகளை வெளிப்படுத்த வில்லை என்றும், அது கொரோனா வைரஸ் பாதிப்பை தடுக்கும் என்ற சான்றுகள் உறுதிப்படுத்தப் படாத நிலையில் பல்வேறு நாடுகள் கூடுதலாக பூஸ்டர் தடுப்பூசிகளை ஆர்டர் செய்து வருவதாக உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை விஞ்ஞானி சவும்யா சுவாமிநாதன் கூறியுள்ளார். தனிப்பட்ட தடுப்பூசி தயாரிக்கும் நிறுவனங்கள் அதன் தேவையை தீர்மானிக்க முடியாது என்றும், பாதிப்பு அடிப்படையில் நாடுகள் முடிவு செய்ய வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தடுப்பூசி ஏற்றத்தாழ்வை தடுக்கவும், ஏழை நாடுகளுக்கும் தடுப்பூசி கிடைக்க வேண்டுமெனக்கூறி உலக சுகாதார நிறுவனம், ‘கோவாக்ஸ்’ என்ற திட்டத்தை கடந்த பிப்ரவரி முதல் முன்னெடுத்து வருகிறது. அதன்மூலம் இதுவரை 9 கோடி தடுப்பூசிகள், 132 நாடுகளை சேர்ந்த எளியோருக்கு விநியோகம் செய்யப்பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது. இருப்பினும், இந்த முன்னெடுப்புக்கு, கடந்த சில மாதங்களாக போதிய அளவில் நாடுகளிடமிருந்து ஆதரவு கிடைக்கவில்லை என உலக சுகாதார நிறுவனத்தினர் கூறுகின்றனர்.

Link Source: https://ab.co/3i3NFsB