Breaking News

நெஸ்லே நிறுவனம் தயாரிக்கும் உணவுப் பொருட்களில் 60% உடலுக்கு ஆரோக்கியமானது இல்லை.

ஸ்விசர்லாந்தை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் நெஸ்லே நிறுவனம் உலகம் முழுவதும் தன்னுடைய பொருட்களை உற்பத்தி செய்து சந்தைப்படுத்தி வருகிறது.

நெஸ்லே நிறுவனம் மேகி, கிட்கேட், பால் ,பால் சார்ந்த பொருட்கள், பீசா வகைகள் என 900 க்கும் அதிகமான பொருட்களை உலகம் முழுவதும் விற்பனை செய்கிறது.

கொரோனா ஊரடங்கின் போது நெஸ்லே நிறுவனத்தின் பொருட்களின் விற்பனையும் அதிகரித்திருந்தது.

இந்நிலையில் நெஸ்லே நிறுவனத்தின் உயர் அதிகாரிகளால் தயாரிக்கப்பட்ட ஆய்வறிக்கை பொது வெளியில் கசிந்துள்ளது.

அதில் பல அதிர்ச்சியூட்டும் விவரங்களும் தெரியவந்துள்ளது.

அதன்படி நெஸ்லே தயாரிக்கும் 60% பொருட்கள் பெரும்பாலும் உடலுக்கு தீங்கு விளைவிக்க கூடியதாகவும், ஆரோக்கியமானதாக இல்லை என்று குறிப்பிட்டுள்ளது.

நெஸ்லேவின் குளிர்பான வகைகள், ஐஸ்கிரீம் வகைகள், இனிப்பு வகைகள் இதில் அடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியாவின் உணவு பொருள் தரக்குறீயிடு ஆய்வில் நெஸ்லேவின் சுமார் 30% பொருட்களே 3.5/5 மதிப்பு பெற்றுள்ளதும் குறிப்பிடப்பட்டுள்ளது.

About 60% of the food produced by Nestle is unhealthyஇதில் சில பொருட்களை எவ்வளவு மேம்படுத்தினாலும், அவை உடலுக்கு தீங்கு விளைவிக்கக்கூடியதாகவே இருக்கும் என்றும் அந்த நிறுவனத்தின் ஆய்வில் தெரியவந்துள்ளது. DiGiorno, croissant crust வகை pizzaக்கள் அனுமதிக்கப்பட்ட அளவை விட கூடுதலாக சோடியம் கலந்துள்ளது தெரியவந்துள்ளது. குழந்தைகளுக்கான உணவு பொருட்கள் இந்த ஆய்வில் எடுத்துக்கொள்ளப்படவில்லை என்று தெரிகிறது. இதில் அமெரிக்காவில் விற்கப்படும் நெஸ் குவிக் என்னும் உடனடி பாலில் 14% சர்க்கரை சேர்க்கப்படுவதும் இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள நெஸ்லே நிறுவனத்தின் முதன்மை அதிகாரி Mark Schneider , ஆரோக்கியமற்ற உணவுகளை நெஸ்லே தயாரிப்பதாக எழும் குற்றச்சாட்டை நிராகரித்துள்ளார்.

நெஸ்லே நிறுவனம் ஆரோக்கியமான உணவைக் மக்களுக்கு கொண்டு சேர்ப்பதில் உறுதி பூண்டிருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

நெஸ்லே நிறுவனத்தின் ஆண்டு வருவாய் £72.7 பில்லியன் ஆகும்.

Link Source: https://bit.ly/3z2Wx9P