Breaking News

2020 கூட்டாட்சி பட்ஜெட்டில் யாரெல்லாம் வெற்றியாளர்கள்? யாரெல்லாம் தோல்வியாளர்கள் ?ஒரு பார்வை !

செவ்வாய்க்கிழமை இரவு கூட்டாட்சி அரசு வெளியிட்ட அறிக்கையின்படி கொரோனா நெருக்கடியால் பொருளாதாரம் மிகப்பெரிய அழிவை சந்தித்திருக்கின்றது.

இரண்டாம் உலகப்போர் தொடங்கியதிலிருந்து இன்று வரை கூட்டாட்சி பட்ஜெட்டில் யாரெல்லாம் வெற்றியாளர்கள், யாரெல்லாம் தோல்வியாளர்கள் என்பதைப்பற்றிய தெளிவான பார்வை இங்கு பார்ப்போம் !

2020 ஆம் ஆண்டு Federal பட்ஜெட்டில் வெற்றியாளர்கள் :

வரி செலுத்துவோர் : 2020 மற்றும் 2021 வருடங்களுக்கான வருமான வரி கடந்த ஜூலை 1ஆம் தேதியாக மாற்றி சட்டம் இயற்றப்பட்டுள்ளது.
Treasurer Josh Frydenberg இதைப்பற்றி கூறியதாவது லோ மற்றும் மிடில் கிளாஸ் வருமானம் ஈட்டுபவர்கள் $2,745 வரையிலும் நிவாரணம் பெறுவதாகவும், சிங்கிள் $5490 வரை நிவாரணம் பெறுவதாகவும் கடந்த 2017 – 2018 ஆண்டுகளை ஒப்பிட்டு கூறியுள்ளார்.

முதல் வீடு வாங்குபவர்கள் : முதல்முறையாக வீட்டு கடன் விண்ணப்பிக்கும் ஆஸ்திரேலிய மக்களுக்கு 10,000 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இது புதிய வீடு கட்டுவதற்கும் புதிய வீடு வாங்குவதற்கும் பொருந்தும்.

உற்பத்தித் துறை : கிட்டத்தட்ட $1.3 பில்லியன் புதிய முயற்சிகள் கூட்டாட்சி அரசுக்கு கீழ் முதலீடு செய்யப்பட்டு ஆறு பகுதிகளாக உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. அதில் உணவு குளிர்பானம், மருத்துவ பொருட்கள், recycling and clean energy, defence and space உள்ளிட்ட பொருட்கள் அடங்கும்.

வயது ஓய்வூதியம் பெறுவோர் : கடந்த ஏப்ரல் மற்றும் ஜூலை மாதம் வரையிலும் $750 வழங்கப்பட்ட நிலையில், வரும் டிசம்பர் முதல் மார்ச் மாதத்திற்குள் மேலும் $250 வழங்க உள்ளது.

இளம் வேலை தேடுபவர்கள் : 16 வயது முதல் 30 வயதுக்கு உட்பட்டவர்கள் பலரும் இப்பொழுது புதிய வேலைகளை உருவாக்கி பயனடைந்து வருகின்றனர்.

2020 ஆம் ஆண்டு கூட்டாட்சி பட்ஜெட்டில் தோல்வியாளர்கள்:

குழந்தைகளுடன் குடியேறியவர்கள் : 2020-2021 நிதிநிலை ஆண்டில் சுமார் 77, 300 குடும்பங்களின் விசா காலம் மூடப்பட்டுள்ளது. அதில் 72,300 partner விசாவும் 5000 விசாக்கள் குடும்பங்கள் மற்றும் குழந்தைகள் உடையது என்பது குறிப்பிடத்தக்கது.

திறமை இல்லாமல் குடியேறியவர்கள் : ஆஸ்திரேலியா தனது தேசிய அளவிலான எல்லைகளை மீண்டும் திறந்தபின் ஆஸ்திரேலியாவிற்கு வருகை தரும் பயணிகளின் எண்ணிக்கை மூன்றில் இரண்டு பங்கு என்ற கணக்கில் நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்க உதவிகரமாக இருந்துள்ளது.