Breaking News

நியூ சவுத் வேல்ஸ்-ல் மேலும் 199 பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி : தடுப்பூசிக்கான புதிய இலக்கை நிர்ணயித்தார் ப்ரீமியர் Gladys Berejiklian

199 more infected in New South Wales confirmed. Premier Gladys Berejiklian sets new target for vaccine

நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் இந்த ஆண்டு ஆகஸ்ட் மாத இறுதிக்குள் 6 மில்லியன் தடுப்பூசிகள் போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக ப்ரீமியர் Gladys Berejiklian தெரிவித்துள்ளார்.

இதனிடையே நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட ஒரு லட்சத்து 4 ஆயிரத்து 536 பரிசோதனையில் 199 பேருக்கு மேலும் வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மிக மோசமான டெல்டா வகை வைரஸ் பாதிப்பில் உச்சத்தை எட்டி கொண்டிருப்பதாக ப்ரீமியர் எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும், 53 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதுவரை 3.9 மில்லியன் பேருக்கு தடுப்பூசிகள் போடப்பட இருப்பதாகவும் இந்த ஆண்டு ஆகஸ்ட் மாத இறுதிக்குள் 6 மில்லியன் டோஸ் தடுப்பு ஊசிகள் போடப்படும் என்றும் அதற்கான இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உரிய முறையில் திட்டத்தை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ப்ரீமியர் Gladys Berejiklian என்றும் தெரிவித்துள்ளார்.

அதே நேரத்தில் ஆகஸ்ட் 29-ஆம் தேதி மாகாணத்தில் போடப்பட்டுள்ள முடக்க நிலை முடிவுக்கு வருவதாகவும், அதற்குள்ளாக தடுப்பூசி நடவடிக்கைகளை விரைவுபடுத்த உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

199 more infected in New South Wales confirmed. Premier Gladys Berejiklian sets new target for vaccine.10 மில்லியன் தடுப்பூசிகளை எட்டும்போது மாகாணத்தில் 80 சதவீத மக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு இருக்கும் என்றும், அதற்கான ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என்றும் பிரீமியர் கேட்டுக்கொண்டுள்ளார். இந்த நடவடிக்கைகளை தீவிரப்படுத்திய பின்புதான் நாம் கிரேட்டர் சிட்னி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தளர்வு நிலைகளை கொண்டு வர முடியும் என்றும், வைரஸ் பாதிக்கும் நிலை இன்னும் தீவிரமாக அதிகரிக்குமா, நிலைமை மோசமாகும் என்பது குறித்து நம்மால் கணிக்க இயலாது என்றும் பிரிமியர் குறிப்பிட்டுள்ளார்.

மக்கள் எதிர்பார்க்கும் இயல்பு நிலையை நியூ சவுத் வேல்ஸ் என்று கிரேட்டர் சிட்னி உள்ளிட்ட பகுதிகளில் கொண்டு வருவதற்கான அனைத்து முயற்சிகளையும் தாங்கள் படிப்படியாக மேற்கொண்டு வருவதாகவும் Gladys Berejiklian தெரிவித்துள்ளார்.

Link Source: https://ab.co/3jjUqr5