Breaking News

முன்னேறி வரும் விக்டோரியா !கொரோனா பாதிப்பில் பெரிய அளவில் மாற்றம் !

கடந்த மூன்று மாதங்களில் இல்லாத அளவிற்கு இன்று மிகக் குறைந்த அளவிலேயே புதிய நோய்த்தொற்றுகள் ஏற்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களாகவே விக்டோரியாவை ஆட்டிப் படைத்து வந்த கொரோனா நோய் தொற்று தொடர்ந்து உச்சத்தை தொட்டு கொண்டிருந்த நிலையில் இப்பொழுது படிப்படியாக குறைந்து அரசுக்கு நம்பிக்கை அளித்துள்ளது.

விக்டோரியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக வெறும் 11 புதிய நோய் தொற்றுகளும் 2 இழப்புகளும் மட்டுமே ஏற்பட்டுள்ளது. இது கடந்த காலத்தை ஒப்பிட்டு பார்க்கும்போது மிக மிக குறைந்த அளவே. கடந்த ஜூன் 16-ஆம் தேதி முதல் ஆஸ்திரேலியாவில் தொற்று ஏற்பட்டோரின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து இரண்டாவது நிலையை எட்டியது.

இந்நிலையில் இதுவரை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மொத்த நோய்களின் எண்ணிக்கை 657 ஆகவும், 23 தொற்றுகள் தேசிய அளவில் ஏற்பட்டுள்ளது எனவும் புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. கடந்த காலத்தை குறிப்பிடுகையில் இது மிக மிக குறைவான எண்ணிக்கையே ஆகும்.

இரண்டு மூதாட்டிகள் கொரோனா நோய் தொற்றினால் நேற்று இரவு இறந்த நிலையில், இப்பொழுது கடந்த 14 நாட்களை ஒப்பிட்டு பார்க்கையில் மெட்ரோ பொலிட்டன் மெல்போர்னில் சராசரி விகிதம் 34.4 தொற்றுக்கள் எனவும், மாநிலங்கள் 50 நோய் தொற்றுக்கும் கீழ் உள்ளவைகள் இரண்டாம் படிக்கு முன்னேறி பெரும்பாலான வணிகங்கள் திறக்க வாய்ப்புள்ளது.

விக்டோரியா பிரதமர் டேனியல் ஆண்ட்ரூஸ், இன்று ஒரு சிறந்த என கூற முடியாது, மிகச் சிறந்த நாள் என்று மட்டுமே கூற முடியும் அந்த அளவிற்கு நாம் அனைவரும் ஒன்று கூடி தொற்றின் வீரியத்தை குறைத்து, புதிய நோய் தொற்றுகளின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது. நாம் பயன்படுத்திய யுக்திகள் மிகச் சிறப்பாக செயலாற்றி உள்ளது என பிரதமர் டேனியல் ஆண்ட்ரூஸ் இதை மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.

அனைவருக்கும் மிக விரைவிலேயே இயல்பு நிலைக்கு திரும்ப வேண்டும் என்ற பெரும் ஆசை உள்ளது. ஆனால் அவ்வாறு எடுத்தோம் கவிழ்த்தோம் என சீக்கிரமே பழையபடி இருக்க அவசரப்பட்டால் அதன் பின் விளைவுகள் மிக மோசமாக இருக்கும் எனவே அனைவரும் பொறுமையுடன் அரசுக்கு ஒத்துழைப்பு அளித்தால் கடுமையான தடுப்பினால் அனைவரும் நிம்மதிப் பெருமூச்சு விடலாம்.

விக்டோரிய அரசின் இந்த வழிகாட்டுதலை வரவேற்ற Deputy chief medical officer Dr.Nick Coatsworth, அனைவரும் இப்பொழுது மெல்ல மெல்ல இயல்பு நிலைக்குத் திரும்பிக் கொண்டு வருகிறோம்.ஆனால், அதே சமயம் ஒன்றை மட்டும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும் கொரோனாவை வெல்ல நாம் இன்னும் போக வேண்டிய தூரம் நிறைய இருக்கிறது.

விக்டோரியா மக்கள் கட்டாயம் அரசு சொன்னபடி பாதுகாப்பான விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும் முக்கியமாக மெல்போர்ன். மேலும் பிரதமர் கூறியதில் கடந்த 24 மணி நேரத்தில் மொத்தம் 7,164 பேருக்கு சோதனை செய்யப்பட்டுள்ளது. இது கிட்டத்தட்ட போதுமான அளவே இன்னும் ஓரிரு வாரங்களிலேயே நாம் இப்போது இருப்பதைவிட கீழே சென்று விடலாம். அனைவருக்கும் பரிசோதித்தல் என்பது மிக மிக கட்டாயமான ஒன்று அதேசமயம் தேவையும் கூட என அவர் கூறியுள்ளார்.

இந்நிலையில் எஜுகேஷன் மினிஸ்டர் ஜேம்ஸ் மெர்ல்லினோ (Education minister James Merlino )அறிவித்திருந்த அறிவிப்பில் விக்டோரியாவின் பள்ளிகள் 4 டேர்ம்மில் (term )மீண்டும் திறக்க வாய்ப்புள்ளது. கூடவே போதிய பாதுகாப்பு உபகரணங்களுடன் மற்றும் பிரைமரி ஸ்கூல்ஸ்(primary schools ) வரும் அக்டோபர் 5 ஆம் தேதியிலிருந்து ஆன் சைட்டுகளில் (on site)படிக்கலாம் எனவும் தெரிவித்துள்ளார்.