Breaking News

வடக்குக் கடற்கரையில் தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு !

வடக்கு கடற்கரையில் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் 28 ஆக அதிகரித்த பின்னர் அனைத்து NSW குடியிருப்பாளர்களுக்கும் அவசர சோதனை மேற்கொள்ளும் படி NSW health வலியுறுத்தியுள்ளது .மேலும்,அனைவரும் மூன்று நாட்களுக்கு வீட்டிலேயே இருக்குமாறு கூறப்பட்டுள்ளது.

தற்போது கொரோனா வைரஸ் வெளிநாட்டிலிருந்து ஆஸ்திரேலியாவுக்குள் நுழைந்தது என்பதை மரபணு பரிசோதனை மூலம் உறுதிப்படுத்தியுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர், ஆனால் இது எவ்வாறு பரவியது என்பதை தீர்மானிக்க முடியவில்லை என்று அவர்கள் கூறியுள்ளனர் .

வடக்கு கடற்கரை உள்ளூராட்சி பகுதியை hotspot -ஆக federal Chief Medical Officer Paul Kelly அறிவித்துள்ளார்.டிசம்பர் 11 அன்று Avalon Beach RSL-இல் 8 பேர் பாதிக்கப்பட்டதாக கூறியுள்ளனர்.முதல் இரண்டு தொற்றுகள் புதன்கிழமை அன்று உறுதி செய்யப்பட்டன.

உறுதிப்படுத்தப்பட்ட சில கொரோனா தொற்றுகள் வடக்கு கடற்கரைகளில் வசிப்பவர்கள் அல்ல என்பது கண்டறியப்பட்டுள்ளது.அதனால் சிட்னி முழுவதும் பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளதாக NSW Premier Gladys Berejiklian எச்சரித்துள்ளார்.அதனால் அனைவரும் பாதுகாப்பாக இருக்க வலியுறுத்தியுள்ளார்.

சுகாதார அதிகாரிகள் வடக்கு கடற்கரைகளில் வசிப்பவர்களுக்கு ஆரம்பத்தில் வழங்கப்பட்ட சோதனை முறையீட்டை முழு மாநிலத்திற்கும் நீட்டித்துள்ளனர்.தலைவலி, சோர்வு, இருமல், தொண்டை வலி அல்லது சளி போன்ற லேசான அறிகுறிகள் இருந்தால் உடனடியாக சோதனை செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள், கொரோனா தொற்று இல்லை என்று முடிவு வரும் வரை தனிமைப்படுத்திக்கொள்ளுமாறு சுகாதார துறை கூறியுள்ளது .

மூன்று புதிய கொரோனா பரிசோதனை மையங்கள் Avalon Recreation Centre, Newport Community Centre, மற்றும் Warringah Aquatic Centre-இல் திறக்கப்பட்டுள்ளது .அதில் மக்கள் நீண்ட வரிசையில் நின்று பரிசோதனை மேற்கொண்டனர் .இந்த புது தொற்றுகள் காரணமாக பல பயண கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டுள்ளது .அதனால் கிறிஸ்துமஸ் பயணத்திட்டங்களை சற்று சீர்குலைத்துள்ளதாகவும் பலர் கூறியுள்ளனர்.

பணியில் இருக்கும் சர்வதேச விமானக் குழுவினருடன் தொடர்பிலிருந்த நபர் வைரஸால் பாதிக்கப்பட்டார் என்று உறுதிசெய்யப்பட்டுள்ளது .
இதற்கிடையில், டிசம்பர் 5 சனிக்கிழமையன்று தென் அமெரிக்காவிலிருந்து சிட்னிக்கு சென்ற 13 விமானக் குழு உறுப்பினர்களுக்கு $1000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக NSW காவல்துறை அறிவித்தது.

அவர் Mascot-இல் தன்னை தனிமைப்படுத்திக்கொள்ளாமல் அருகிலுள்ள தொழில்களில் கலந்து கொண்டதாக போலீசார் குற்றம் சாட்டியுள்ளனர்.பிரதமர் ஸ்காட் மோரிசன் மக்கள் அமைதியாக இருக்கவும் அவர்களின் உள்ளூர் அதிகாரிகளின் சுகாதார ஆலோசனையைப் பின்பற்றவும் வலியுறுத்தியுள்ளார்.

“தொற்றுநோய் நீங்கவில்லை.அது போகவில்லை “என்று அவர் கூறினார்.எனவே இது போல் நிச்சயமற்ற தன்மைகளும், இந்த இடையூறுகளும் தொடர்ந்து நிகழும்.அதனால் அனைவரும் பாதுகாப்பாக இருக்கும் படி அவர் வலியுறுத்தி உள்ளார்.