Breaking News

தனிமை படுத்தப்பட்டவர்கள் மூலம் அதிக கொரோனா தொற்று பாதிப்பு! தலைமை சுகாதார அதிகாரி எச்சரிக்கை !

விக்டோரியாவின் தலைமை சுகாதார அதிகாரி ஹோட்டல் தனிமை படுத்தப்பட்டவர்கள் மூலம் அதிக கொரோனா தொற்று பாதிப்பு இருப்பதாக கூறியுள்ளார் !

விக்டோரியா சுகாதார அதிகாரி பிரட் சட்டன், அதிகாரிகளால் ஆய்வு நடத்திய பிறகு மாநிலத்தின் ஹோட்டல் தனிமைப்படுத்தல் திட்டத்தை அவசரமாக பரிசீலிக்குமாறு வேண்டுகோள் விடுத்தார. இது தொடர்பாக ,ஏப்ரல் 9 ஆம் தேதி, துணை பொது சுகாதாரத் தளபதி ஃபின் ரோமானஸ், பேராசிரியர் Brett Sutton மற்றும் அவரது துணை அன்னலீசி வான் டைமன் சார்பாக மூத்த சுகாதார குழு மற்றும் ஊழியர்களுக்கு செய்தி அனுப்பினார்கள் (e-mail ) என்பது குறிப்பிடத்தக்கது. அதில் அவர் முன்னணி அதிகாரிகள் திருப்தி அடையவில்லை,மற்றும் போதுமான அளவில் திட்டங்கள் இல்லை என்று ரொமான்ஸேஸ் கூறி உள்ளார்.செயல்கள் சிக்கல் மற்றும் திட்ட சிக்கல்கள் தீர்க்கப்படாவிட்டால் பாதிக்கப்பட்டவர்களின் உடல்நலத்திற்கு ஆபத்து ஏற்படும் என்று கூறுகின்றனர்.

Brett Sutton மற்றும் டாக்டர் வான் டைமன் ஆகியோர் இரண்டு வாரங்களாக மட்டுமே செயல்பட்டு வந்த இந்த திட்டத்தின் கட்டமைப்பைப் பற்றி அவசர ஆய்வு செய்ய விரும்புவதாக டாக்டர் ரோமானஸ் ஆலோசனை கூறினார் . Brett Sutton, டாக்டர் ரோமன்ஸ்சிடம் அவசர ஆய்வை ஆதரிப்பதாகவும் கூறியுள்ளார்.

விசாரணையில் Brett Sutton தொற்றுநோய்களின் போது டி.எச்.எச்.எஸ்(DHHS ) அதிகாரிகள் ஜேசன் ஹெல்ப்ஸ் மற்றும் ஆண்ட்ரியா ஸ்பிட்டேரி மாநிலக் கட்டுப்பாட்டாளரை கூட்டாக பொறுப்பில் நியமிக்கும் முடிவை ஏற்கவில்லைஎன்பது தெரியவந்து உள்ளது . இன்ஃப்ளூயன்ஸா(Influenza ) தொற்றுக்கான மாநிலத்தின் திட்டத்தின் கீழ், தலைமை சுகாதார அதிகாரி ஒரு மாநில கட்டுப்பாட்டாளரின் பங்கையும் அவசரகால பதிலளிப்பு நடவடிக்கைகளுக்கான ஒட்டுமொத்த பொறுப்பையும் ஏற்க வேண்டும் என்று கூறி உள்ளார் . சுட்டன் இந்த பொறுப்பை ஏற்க முடியாது என்றும் கூறி உள்ளார்.

டி.எச்.எச்.எஸ் செயலாளர் கிம் பீக் ஜூலை மாத இறுதியில் இந்த பொறுப்பில் இறங்கினார், இது பார்த்த Brett Sutton அப்போது பொருத்தமான ஆல் பொறுப்பில் இருப்பதாக கருத்தும் தெரிவித்தார். ஏனேனில் Brett Sutton அவரது குழுவும் மாநிலத்தின் ஹோட்டல் தனிமைப்படுத்தப்பட்ட திட்டத்தின் செயல்பாட்டு இயக்கத்தில் நேரடியாக ஈடுபடவில்லை. மேலும் ஸ்வான்ஸ்டன் மற்றும் ஸ்டாம்போர்ட் பிளாசா ஹோட்டல்களில் பிரச்னையில் இருந்தவர்களை சமாளிப்பதற்காக பாதுகாப்பு காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என்று தனக்கு தெரியாது என்று Brett Sutton கூறினார்.

பிறகு ,கொரோனா நோயால் பாதிக்கப்பட்ட நிலையில் ஸ்டாம்போர்ட் பிளாசாவிலிருந்து திரும்பி வந்த ஒரு பயணி விடுவிக்கப்பட்டு, அவர்களை வீட்டிற்கு அழைத்துச்சென்ற டிரைவருக்கும் தொற்று ஏற்பட்டுள்ளது என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது .அந்த சமயம் ,பரிசோதனை செய்வது தன் ஆர்வத்திற்கு ஏற்ற படி செய்துகொள்ளலாம் மற்றும் தொற்றின் அறிகுறி உள்ள பயணிகள் மட்டும் பரிசோதனை செய்ய வேண்டும் என்று கூறப்பட்டு உள்ளது.

ஆனால், தொற்று உறுதி செய்யபட்டவர்களுக்கு ஹோட்டலில் 14 நாட்களுக்கு மேல் தனிமைபடுத்த அனுமதி கிடைக்காமல், வீட்டில் தனிமை படுத்திகொள்ள உத்தரவு விட்டது அந்த ஹோட்டல் நிறுவனம். இதனால் தொற்றின் பாதிப்பு அறியாமல் மேலும் சில பயணிகள் இருக்கலாம் என்று Brett Sutton சந்தேகிக்கிறார். கடந்த ஜூன் மதத்தில் 30 சதவீத பயணிகள் ஹோட்டலில் பரிசோதனை செய்ய மறுத்து உள்ளதாக கூறுகின்றனர் .மேலும் புது சட்டம் ஒன்று பிறப்பிப்பதாக அம்மாகாணத்தின் சுகாதார குழு முடிவு செய்துள்ளது. இந்த சட்டத்திற்கு கீழ், பயணிகள் மேலும் 10 நாட்கள் தனிமை படுத்திக் கொள்ள வேண்டும் என்று அக்குழு தெரிவித்துள்ளது.