Breaking News

போதை பயன்பாடு மற்றும் கருணை மரணம் சட்டப்பூர்வமாக வேண்டுமா?

நியூசிலாந்து மக்கள் இந்த வாரம் தேர்தல் வாக்களிக்க வருகிறார்கள். இந்த தேர்தல், Jacinda Ardern தொடர்ந்து prime ministerஆக நீடிக்க வேண்டுமா? இல்லையா ?என்பதோட இரண்டு பெரிய சமூக மாற்றம் குறித்தும் தீர்மானிக்க உள்ளது.

வாக்காளர்கள் மத்தியில் கருணை மரணம் மற்றும் கஞ்சா பயன்பாடு பற்றிய அவர்களது எண்ணங்கள் இந்த தேர்தலில் வெளிப்படும்.மக்கள் வாக்கெடுப்பில் இவ்விரண்டில் ஏதாவது ஒன்று சட்டப்பூர்வமாக ஆக்கப்பட்டால். இதை செய்த முதல் தேசம் நியூசிலாந்தாகத்தான இருக்கும்.

ஆனால் இந்த விவாதம் கொரோனா பிரச்சனையால் திசை திருப்பப்பட்டுள்ளதாக Otago பல்கலைகழக சட்டப் பேராசிரியர் Andrew Geddis தெரிவித்தார்.தேர்தல் நெருங்கும் நேரத்தில் கருணை மரணத்திற்கு இருக்கும் ஆதரவு கஞ்சா பயன்பாட்டுக்கு வரும் என்பது சந்தேகமே.

இளைஞர்களின் வாக்குகளே இதை தீர்மானிக்கும் என முன்னாள் New Zealand prime minister Helen Clark தெரிவித்துள்ளார்.கஞ்சா பயன்படுத்துபவர்களை குற்றாளிவாளிகள் போல் கருதுவது நியாயம் இல்லை. இது மென்மை ரக போதை பொருள். புகையிலை சாராயத்தை ஒப்பிடுகையில் உடலுக்கு பெரிய தீங்கும் இல்லை என Ms Clark தெரிவித்தார்.

கஞ்சா பயன்படுத்துவோரை இலக்காக கொள்ளாமல், அதை உடல் நிலையை பாதிக்கும் பழக்கமாக கருத வேண்டும். போதைப் பழக்கத்தை மையமாகக் கொண்ட வணிகத்தை வளர்ப்பதற்கு பதிலாக அந்த நிதியை கல்விக்கும் மருத்துவத்துக்கும் செலவழிக்கலாம் என திரு Aaron Ironside தெரிவித்துள்ளார்.

மறுபுறம் கருணை மரணத்திற்கு மக்களிடம் நல்ல வரவேற்பு உள்ளதாகத் தெரிகிறது. கடந்த 20 ஆண்டுகளில் நடந்த வாக்கெடுப்பில் மூன்றில் இரண்டு பங்கு மக்கள் இதை ஆதரிக்கிறார்கள் என பேராசிரியர் Geddis தெரிவித்தார்.

இந்த ஆதரவுக்கு மத்தியில், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து 1700 மருத்துவர்கள் ஒரு கடித்ததில் கையெழுத்திட்டு உள்ளனர். கருணை மரணம் சட்டம் ஆக்கப்பட்டாலும் இது அறத்திற்கு புறம்பானது. மருத்துவர்கள் மேல் நோயாளிகள் வைத்திருக்கும் நம்பிக்கையை இது உடைத்துவிடும். என்று அவர்கள் அக்கடிதத்தில் தெரிவித்துள்ளனர்.

Anti-euthanasia group care Alliance இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.Ms Clarke இந்த திட்டத்தில் உறுதியாக உள்ளார்.
இதை பற்றி மக்கள் வாக்கெடுப்பு வேண்டும் என சிலரும், வேண்டாம் என்று சிலரும் தங்களது கருத்தை தெரிவித்துள்ளனர்.

இந்த கொரோனா தாக்கத்தால் இதைப் பற்றிய விவாதங்கள் சரியான முறையில் சட்டமன்றத்தில் வைக்கப்பட இயலவில்லை என்று பேராசிரியர் Geddis கூறியுள்ளார்.