Breaking News

சர்ச்சையானது போலீஸ் அதிகாரிகளின் செயல் ! பணிநீக்கம் செய்யப்பட்ட அதிகாரிகள் !

போலீசார் மர்ம நபரை தாக்கிய சம்பவம் … பணிநீக்கம் செய்த உயர் அதிகாரிகள் !

சமீபத்தில் போலீஸ் அதிகாரிகளால் கடுமையாக ஒரு இளைஞர் தாக்கப்பட்ட வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பெருமளவு வைரலாக பரவி வந்தது. அதன் விளைவாக போலீஸ் அதிகாரிகள் பணிநீக்கம் செய்யப்பட்டனர்.

விக்டோரியா போலீஸ் அதிகாரிகளால் 32 வயது இளைஞர் நடுரோட்டில் தாக்கப்பட்டார். கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை 4 மணி அளவில், நார்த் மெல்பான் போலீசார் , சந்தேகத்தின் பெயரில் ஒரு மனிதரை அழைத்தபோது அவர் வித்தியாசமாக நடந்து கொண்டுள்ளார். அவர் மீது சந்தேகம் ஏற்பட்டதால் அவரை போலீசார் விசாரணை நடத்த முடிவெடுத்தனர். அவரை கைது செய்ய முற்பட்ட போது அவர் வித்தியாசமாக நடந்து கொண்டதும், போலீஸ் அதிகாரிகள் வாகனங்களை சேதப்படுத்தியதாகவும் அதனால் தான் அவரை தாக்கியதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

அந்த வீடியோவில் 6 போலீசார்கள் சுற்றி நின்று ஒருவரை நடுரோட்டில் தாக்குகின்றனர். அந்த வழியாக சென்ற நபர் ஒருவர் அங்கு நடக்கும் காட்சிகளை வீடியோவாக பதிவு செய்தார். அதில், போலீசார்கள் அந்தப் பெயர் தெரியாத இளைஞரை தரையில் போட்டு தலையை நன்றாக இறுக்கிப் பிடித்து அடிக்கும் காட்சி அனைவரின் மனதையும் உலுக்கியது. ஆனால் அந்த போலீசார்கள் மேலதிகாரிகளின் கட்டளையினால் தான் அவரை கைது செய்ய முற்பட்டதாக குறிப்பிட்டு இருந்தனர். அவர் வித்தியாசமாக நடந்து கொண்டதால் தான் நாங்கள் இந்த முடிவை எடுத்தோம் என்று சில போலீஸ்காரர்களும் சொன்னதாகவும் கூறப்படுகிறது .

இந்த வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவிய நிலையில், இது சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகளை விசாரணை நடத்தி வந்தனர். போலீஸார் அந்த மனிதரை தலையில் வேகமாக தாக்கியதால் அவர் கோமா நிலைக்கு சென்றதாகவும் கூறப்படுகிறது. தாக்கப்பட்ட மனிதரின் தந்தை கிளேன் அட்கின், போலீஸ்காரர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அந்த அதிகாரிகள் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை வைத்து உள்ளார் .அவரது கோரிக்கையை ஏற்று கொண்ட உயரதிகாரிகள் ,தாக்குதலில் ஈடுபட்ட போலீஸ் அதிகாரிகளை தீவிரமாக விசாரணை நடத்தினர் .

தற்போது அந்த நபர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட போதும், அந்த அறையில் உள்ள கண்ணாடி கதவுகளையும் அந்த மனிதர் உடைத்ததாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது. இது தொடர்பாக போலீசார் விசாரணை செய்த உயர் அதிகாரிகள் ,நடு ரோட்டில் தாக்குதலில் ஈடுபட்ட காவல்துறையினரை பணிநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளனர். விக்டோரியாவில் நடந்த இந்த கொடூர சம்பவம் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.