Breaking News

கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்ட செவிலியர் தொலைக்காட்சி நேரலையின் போது மயக்கம் !

US -ல் முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்ட Tennessee-ஐ சேர்ந்த முன்கள பணியாளரான செவிலியர் ஒருவர் தொலைக்காட்சி நேரலையின்போது மயக்கம் அடைந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Tennessee Valley-ல் உள்ள CHI Memorial மருத்துவமனை பணியாளர்களுக்கு முதல் Covid-19 தடுப்பு ஊசி செலுத்தப்பட்டதை தொலைக்காட்சியில் ஒளிபரப்பினர். வரலாற்றில் இடம் பெறக்கூடிய நிகழ்வாக இருப்பதாலும் மற்றும் அமெரிக்க மக்களுக்கு நம்பிக்கை ஊட்டுவதற்காகவும் இது ஒளிபரப்பப்பட்டது. முதல் தடுப்பு ஊசியினை, அவசர சிகிச்சை பிரிவில் பணியாற்றும் செவிலியர் Tiffany Dover பெற்றுக்கொண்டார்.

கொரோனா பரவல் காலம் மிக கடினமாக இருந்ததாகவும், இந்த தடுப்பூசி மக்களுக்கு நம்பிக்கையை அளிக்கும் என தாம் நினைப்பதாகவும் அவர் நேரலையில் தெரிவித்தார். மருத்துவ பணியாளர்கள் அனைவரும் முதல் கோவிட்-19 தடுப்பூசி மருந்ததை பெற்றுக்கொள்ள உற்சாகமாக இருந்ததாகவும் அவர் தெரிவித்தார். மருந்து பெற்றுக்கொண்ட 10 நிமிடம் கழித்து, தொலைக்காட்சி நேரலையிலேயே அவர் மயக்கமடைந்தார்.

மயக்கம் தெளிந்த பின் நடந்தவற்றை செய்தியாளர்களிடம் அவர் விவரித்தார். அவருக்கு அதீத Vagal Response இருப்பதாகவும் உடலில் எங்காவது வலி ஏற்பட்டால் அவருக்கு மயக்கம் வரும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். தடுப்பூசி போட்டதால் ஏற்பட்ட வலியின் காரணமாகவே தான் மயக்கம் அடைந்ததாகவும், தற்போது நன்றாக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். ஊசி போடும் போது ஏற்பட்ட வலி தற்போது இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.