Breaking News

சிட்னியின் புதிய கொரோனா தொற்றுக்கு பிறகு புது பயணக் கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டுள்ளது !

சிட்னியில் தற்போது ஏற்பட்டுள்ள புது கொரோனா பாதிப்பு காரணமாக புது பயண கட்டுப்பாடுகள் கொண்டு வர அதிகாரிகள் விரைந்துள்ளனர் .
வடக்கு கடற்கரைகளில் தற்போது இந்த பாதிப்பு 41-ஆக அதிகரித்து உள்ளது .எப்படி இந்த பாதிப்புகள் ஏற்பட்டது என்று எந்த ஒரு ஆதாரமும் இதுவரை கிடைக்கவில்லை.

சிட்னியின் வடக்கு கடற்கரைகள் சனிக்கிழமை மாலை 5 மணி முதல் புதன்கிழமை நள்ளிரவு வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பித்தார் NSW Premier Gladys Berejiklian .

விக்டோரியா :

NSW-விலிருந்து விக்டோரியா செல்பவர்கள் பயண அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும். Northern Beaches Government Area -வில் வசிப்பவர்கள் இங்கு நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. Northern Beaches ‘Red Zones’ ஆகவும், Greater Sydney ‘Amber Zone ‘ ஆகவும் மற்றும் மற்ற NSW பகுதிகள் ‘Green Zone’ ஆகவும் கருதப்படுகிறது. Amber Zones-லிருந்து செல்பவர்கள் தங்களை பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் , முடிவுகள் வரும் வரை தங்களை தனிமைப்படுத்திக் கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. டிசம்பர் 11-ஆம் தேதிக்கு பின்னர், Northern Beaches -லிருந்து விக்டோரியா வந்தவர்கள், தங்களை தனிமைப்படுத்திக் கொள்ளுமாறும், பரிசோதனை செய்து கொள்ளுமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குயின்ஸ்லாந்து மற்றும் canberra :

Northern Beaches -ஐ Hot Spot-ஆக சுகாதார அதிகாரிகள் அறிவித்துள்ளனர். டிசம்பர் 11-ஆம் தேதிக்கு பின், அங்கிருந்து வந்த அனைவரும் தங்களை பரிசோதனை செய்துகொண்டு, 14 நாட்கள் தனிமைப்பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும் டிசம்பர் 19ஆம் தேதிக்கு பின், அங்கிருந்து வந்தவர்கள் கண்டிப்பாக தங்கள் சொந்த செலவில் விடுதிகளில் தனிமைப்படுத்திக்கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.Northern Beaches-க்கு Canberra மக்கள் யாரும் பயணம் மேற்கொள்ள வேண்டாம் என அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. டிசம்பர் 11-ஆம் தேதிக்கு பின்,அங்கிருந்து வந்தவர்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டு பரிசோதனை செய்து கொள்ளுமாறும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Western Australia மற்றும் The Northern Territory:

NSW-விலிருந்து வருபவர்கள் தங்களை 14 நாட்கள் தனிமைப்படுத்திக் கொண்டு, 11 ஆம் நாள் பரிசோதனை மேற்கொள்ளுமாறு வழிகாட்டு நெறிமுறைகளை Western Australian அரசு வழங்கியுள்ளது. NSW-க்கு பயணம் மேற்கொள்ள வேண்டாம் என்றும், வருங்காலத்தில் கடுமையான எல்லைக் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்றும் அரசு எச்சரித்துள்ளது.Northern Beaches -லிருந்து வருபவர்கள், Alice Springs அல்லது Darwin-இல் அதிகாரிகளின் மேற்பார்வையில் கண்டிப்பாக 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள் என Northern Territory அறிவித்துள்ளது.

டாஸ்மானியா மற்றும் South Australia :

Northen Beaches மிக அதிக அபாயம் உள்ள பகுதி என Tasmania சுகாதாரப் பணி அதிகாரிகள் அறிவித்துள்ளனர். டிசம்பர் 11-ஆம் தேதிக்கு பின் அங்கிருந்து வருபவர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசியப் பணிக்காக வருபவர்க்கு மட்டும் அனுமதி வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 11-ஆம் தேதிக்கு பின் அங்கிருந்து வந்தவர்கள் தங்களைப் பரிசோதனை மேற்கொண்டு, தனிமைப்படுத்தி கொள்ளுமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.Northern Beaches-லிருந்து வந்தவர்களுக்கு, தனிமைப்படுத்துதல் மற்றும் Covid-19 பரிசோதனை கட்டாயம் என South Australia தெரிவித்துள்ளது. மேலும் இரு மாநிலங்களுக்கு இடையே பயணம் மேற்கொள்பவர்கள், கண்டிப்பாக அனுமதிபெற்றே பயணம் மேற்கொள்ள வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.