Breaking News

காலநிலை மாற்றத்திற்கு உடனடி நடவடிக்கை தேவை-2070-க்குள் $3 ட்ரில்லியன் இழப்பு ஏற்பட வாய்ப்பு !

அடுத்த 50 ஆண்டுகளில் கோவிட் பேரிடரால் குறைந்து போன பொருளாதாரம் காலநிலை மாற்றத்தை கவணிக்காமல் விட்டால் மேலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என ஒரு புதிய அறிக்கை எச்சரிக்கை விடுத்துள்ளது.

பொருளாதாரம் 6 சதவீதம் குறைந்து 2070-க்குள் 880,000 குறைவான வேலைகள் இருக்கும் என்று அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.
தற்போது மதிப்பின் படி இது 3.4 ட்ரில்லியன் டாலர் இழப்பாகும். இது கோவிட் தொற்று நோயின் அபாயங்களை கவனிக்காமல் இருப்பதை காட்டுவதாக Deloite ஆஸ்திரேலியாவின் தலைமை பொருளாதார நிபுணர் Chris Richardson கூறினார்.

மேலும், காலநிலை மாற்றம் என்ற பேராபத்து பற்றி விழிப்புணர்வு வேண்டும் என அவர் அறிவுறுத்தினார்.Market Mechanism மூலம் காலநிலை மாற்றத்தை சமாளிக்க முடியும் என Chris Richardson தெரிவித்தார்.ஆஸ்திரெலியர்களுக்கு தமது பொருளாதாரத்தை நவீனமாக்குகின்ற கொள்கை மற்றும் ஒழுங்கு முறை சீர்திருத்தம் தேவை என்று அவர் தெரிவித்தார்.

உடனடி நடவடிக்கை பயன் தரும் ஆனால் நாம் வாய்ப்பை விரைவாக இழந்துகொண்டு வருகிறோம் என்று திரு Richarson தெரிவித்துள்ளார்.
காலநிலை மாற்றம் சாத்தியம் இல்லை என்பது நிதர்சனம். அதன் செலவுகளும் அதிகம் என்று Deloitte Access Economics பங்குதாரர் Pradeep Philip தெரிவித்தார்.

ஆஸ்திரேலியாவின் அரசு மற்றும் தனியார் துறை முதலீடுகள் zero emission-ஐ நோக்கி கட்டாயம் நகர்வது தவிர்க்க முடியாதது. ஒவ்வொரு நாளும் தாமதிப்பது நாட்டிற்கு பெரும் செலவு ஏற்படுத்தும்.

இதில் புதிய தாதுக்களை சுரங்கத்தில் எடுப்பதை மேம்படுத்துவதற்கான முதலீடு, தேசிய மின்சார சந்தையை மாற்றுவது, ஆஸ்திரேலியாவின் உள்கட்டமைப்பை மாற்றுவது போன்ற உயர் வளர்ச்சி தொழில்கள் குறித்து அறிக்கை கூறுகிறது.