Breaking News

தேர்தல் தோல்விக்கு பின் Deb Frecklington ராஜினாமா !

குயின்ஸ்லாந்த் மாநிலத் தேர்தலில் தனது கட்சியின் கடுமையான தோல்விக்குப் பின்னர் லிபரல் தேசியக் கட்சித் தலைவர் Deb Frecklington தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

லேபர் கட்சி 52 இடங்களைத் தக்கவைத்துக்கொண்டுள்ள நிலையில் எதிர்கட்சி நான்கு இடங்களை இழக்கும். சனிக்கிழமை வாக்கெடுப்பிற்கு பின்னர் திங்கட்கிழமையும் வாக்கு எண்ணிக்கை தொடர்ந்தது.

Ms Frecklington தனது concession உரையில் LNP தலைவராக நீடிப்பதாக அறிவித்த நிலையில், தற்போது தனது மனதை மாற்றிவிட்டதாகத் தெரிவித்தார்.

தேர்தல் முடிவு வந்தவுடன் புதிய கட்சித் தலைவரை கட்சி கூட்டத்தில் வாக்களிக்கப்போவதாகவும். தான் தலைவர் பதவிக்கு போட்டியிடப் போவதில்லை. இதுவரை தான் லிபரல் கட்சியின் தலைவராக இருந்தது தனது பாக்கியம் என்றும் தெரிவித்தார்.

கட்சியின் தோல்விக்கு மன்னிப்பு கோரிய அவர் , தேர்தலில் கடுமையாக உழைத்த தொண்டர்களுக்கு நன்றி தெரிவித்தார்.எங்களுக்கு கிடைத்த பெரும் ஆதரவுக்கு மத்தியில் இந்த தேர்தலில் வெற்றி பெற முடியவில்லை என்பதற்காக நான் வருந்துகிறேன்.கட்சியின் தலைவியாக தேர்தல் தோல்விக்கு நான் பொறுப்பேற்றுக் கொள்கிறேன் என்று Ms Frecklington தெரிவித்தார்.

2015 ஆம் ஆண்டில் Campbell Newman மற்றும் 2017-ல் Tim Nicoles ஆகியோருக்கு பிறகு Premier Annastacia Palaszczuk-வை மூன்றாவது முறையாக தேர்தலில் வீழ்த்தத் தவறியர் ஆவார்.

இவரைத் தொடர்ந்து David Crisafulli மற்றும் Tim Mander ஆகிய இருவரும் தலைவர் பதிவிக்கு போட்டியிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையில் கிறிஸ்துமஸுக்கு முன்னதாக ஒரு பட்ஜெட்டை வழங்குவதற்கான வாக்குறுதியை நிறைவேற்ற premier Annastacia Palasczuk,பொருளாளர் Cameroon Dick மற்றும் துணை பிரதமர் Steven Miles திங்களன்று துறை director-generals-களை சந்திக்கிறார், புதிய பாராளுமன்றம் பதவி ஏற்ற ஒரு வாரத்திற்குப்பின் டிசம்பர் 8 ஆம் தேதி மாநில பட்ஜெட் வழங்கப்படும் என அவர் கூறினார்.