Breaking News

கட்டுப்பாடுகள் அத்துமீறப்பட்டன- டிக் டாக் வீடியோவால் அதிர்ச்சியடைந்த சுகாதாரத் துறை !

டார்வினில் உள்ள ஒரு தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் Dance party நடந்ததற்கான வீடியோ ஒன்று கிடைத்துள்ளது.இதை பார்த்த சுகாதாரத்துறை செம கடுப்பில் உள்ளனர்.இதனால் வடக்கு மாகாணங்களில் உள்ள தனிமைப்படுத்தப்பட்ட அமைப்பை ஆராய்வத்றகு சுகாதார அதிகாரிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

டிக் டாக்கில் பதிவு செய்யப்பட்ட இந்த காணொளியில் முகக்கவசம் அணியாமல் பலர் dance party-யில் கலந்துள்ளனர்.
இந்த வீடியோ Howards Spring Quarantine Facility-யில் படமாக்கப்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது.இந்த சம்பவம் பெரிய வருத்தத்தை ஏற்படுத்தியிருப்பதாக வடக்கு மாகாண ஆஸ்திரேலிய மருத்துவ சங்கத்தின் தலைவர் Robert Parker தெரிவித்துள்ளார்.

இது மாதிரியான செயல்கள் கோவிட் தொற்றை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. வடக்கு மாகாணத்தில் இதுவரை சமூகப் பரவல் இல்லாத சூழ் நிலையில் இது போல் பொறுப்பற்றத் தன்மை கவலை அளிப்பதாக அவர் தெரிவித்தார்.வெளி மாநிலங்களில் இருந்து வடக்கு மாகாணம் வருபவர்கள் 14 நாள் தனிமைப் படுத்துதலை மேற்கொள்ள வேண்டும் என்று அவர் வற்புறுத்தியுள்ளார்.

சிட்னி நகரம் hotspot-ல் இருந்து நீக்கப்பட்டதால்,சிட்னியில் இருந்து வருவோர்க்கு இந்த தனிமைப்படுத்துதல் வெள்ளி முதல் தளர்த்தப்பட்டது.
இருந்தபோதிலும் மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். முகக்கவசங்களை கட்டாயம் அணிய வேண்டும் என்று Dr Pain தெரிவித்துள்ளார்.

இந்த வீடியோவில் உள்ளது போல் மீண்டும் மீண்டும் தொடர்ந்தால் சமுகப் பரவலை தடுக்க முடியாது என Dr Parker கூறியுள்ளார்.
மேலும் தனிமைப்படுத்துதல் நம்மை சோர்வடையச் செய்யும், எரிச்சல் அடையச் செய்யும், இருந்தாலும் இதன் நோக்கம் தொற்று பரவலை தடுப்பதற்காகவே என்பதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும் என Dr Parker தெரிவித்தார்.தற்போது இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவிவருகிறது.மேலும் இந்த சம்பவம் பற்றி கருத்து கூற வடக்கு மாகாண அரசு மறுத்துவிட்டது.