Breaking News

ஒரே ஒரு கொரோனா தொற்று மட்டுமே பதிவு செய்த “one-der-ful Victoria” !

கடந்த 24 மணி நேரத்தில் ஒரே ஒரு புதிய கொரோனா தொற்று மட்டுமே பதிவாகியுள்ளது.அரசு வெளியிட்ட புள்ளிவிவர அறிக்கையின்படி Melbourneஇல் இரு வாரங்களுக்கான கொரோனா பதிவுகள் 8.1சதவீதம் .பிராந்திய விக்டோரியாவில் 0.5 சதவீதமாக குறைந்துள்ளது.
தற்போது Melbourneஇல் மொத்த பதிவுகளின் எண்ணிக்கை 17ஆக உள்ளது.

இந்த புள்ளிவிவரங்கள் மகிழ்ச்சி அளிப்பதாக விக்டோரிய தலைமை சுகாதார அதிகாரி Brett Sutton தெரிவித்தார்.இதை ‘one-der-ful”என சந்தோஷமாக குறிப்பிட்டுள்ளார்.

விக்டோரியாவின் வடக்கில் உள்ள Shepparton-ல் புதிதாக தொற்று எதுவும் பதிவாகவில்லை.ஞாயிறு முதல் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் என Melbourne மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

நாம் covid-free என்று எண்ணி அனைத்து விதிமுறைகளையும் உடனே நீக்க முடியாது என Mr Andrews தெரிவித்தார்.மேலும் இதை நிதானமாகவும் ,பாதுகாப்பாகவும் அணுக வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

இதன் முதல் கட்டமாக மெல்பர்னில் அக்டோபர் 26 முதல் வீட்டிலிருந்து 5km Home Limit கட்டுப்பாடு தகர்த்தப்படும், சில்லறை வணிகமும் hospitality industry-யும் திறக்கப்படும். பத்து பேர் கூடும் அளவு பொதுக்கூட்டத்திற்கு அனுமதி வழங்கப்படும்.

Chadstone Shopping centre-ல் ஏற்பட்ட தொற்று இத்திட்டங்களை தாமதப்படுத்தலாம்.ஞாயிறு அறிவிப்புகள் சமூக கண்ணோட்டத்தில் இருக்குமே தவிர பொருளாதார கண்ணோட்டத்தில் இருக்காது என Andrews தெரிவித்தார்.

17 மர்ம வழக்குகள் தமக்கு கவலை அளிப்பதாக Andrews தெரிவித்தார்.மேலும் இது சமூக பரவலையும் ,அறியப்படாத தொடர்புகளையும் வெளிப்படுத்துவதாக அவர் தெரிவித்து உள்ளார்.