Breaking News

உலக அரங்கில் ஆஸ்திரேலியாவின் தலையை ஓங்கச் செய்ய Scott Morrison வேற லெவலில் பிளான் செய்து வருகிறார்!

ஆஸ்திரேலியாவின் தலையை ஓங்கச் செய்ய Scott Morrison போட்ட மாஸ்டர் பிளான் !

ஆஸ்திரேலியாவில் உள்ள பெரும்பாலான மாநிலங்கள் இப்பொழுது கொரானா பரவல் காரணமாக தனிமைப் படுத்திக் கொள்ளுதல் பெரும்பாலும் கட்டாயமாக்கப்பட்டு இருந்த நிலையில், இப்பொழுது அவ்வாறு தனிமைப்படுத்திக் கொள்ளுதல் கட்டாயமில்லை என கூறியுள்ளது. ஆனால் ஒரே சமயத்தில் அனைவரும் தனிமைப்படுத்திக் கொள்ளுதலை தவிர்க்காமல் படிப்படியாக தான் குறைக்க வேண்டும் என பிரதமர் விரும்புகிறார்.

ஒவ்வொரு வாரமும் பிரதமர் மற்றும் தலைமை மந்திரி உள்ளிட்டோரின் கலந்துரையாடலுக்கு பின் 1500க்கும் மேற்பட்ட மக்கள் விரைவில் ஆஸ்திரேலியாவை வந்து அடைவதற்கான வேலைகள் இப்பொழுது முழு மூச்சில் நடக்க உள்ளது.வரும் செப்டம்பர் 28ஆம் தேதி முதல் 500 ஆஸ்திரேலிய மக்கள் திரும்ப உள்ளதாக NSW ஒப்புக்கொண்டுள்ளது. இதற்கிடையில் குயின்ஸ்லேண்ட் (Queensland ) மற்றும் மேற்கு ஆஸ்திரேலியா (Western Australia) ஒவ்வொரு வாரமும் மேலும் 200 பயணிகளை ஒப்புக்கொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

குயின்ஸ்லேண்ட்டில் வரும் அக்டோபரில் 4ல் 300 பேரையும், தெற்கு ஆஸ்திரேலியா செப்டம்பர் 28ல் 100 பயணிகளை அதன் தலைமையின்கீழ் உயர்த்த உள்ளதாகவும்.மேலும் மேற்கு ஆஸ்திரேலியா அக்டோபர் 11 வரை எந்த ஒரு மாற்றமும் இல்லாமல் அதே நிலையில் இருக்கும் என தெரிவித்துள்ளது.

வெள்ளிக்கிழமை நடந்த தேசிய கலந்தாய்வு சந்திப்பில் ,பிரதம மந்திரி Scott Morrison அனைத்து ஆஸ்திரேலிய மக்களையும் விரைவில் நலமுடன் அவர்களது வீடுகளில் பார்க்க வேண்டும் எனவும் 24,000 க்கும் மேலான ஆஸ்திரேலிய மக்கள் உலக அளவில் நாடு திரும்ப காத்துக் கொண்டிருக்கின்றனர்.இவர்களில் சுமார் 4,000 பேர் பாதிக்கப்படக்கூடிய நிலையில் இருப்பதாக உள்துறை மற்றும் வர்த்தகத் துறை கருதுகின்றது.

குறிப்பாக சரியான விமான போக்குவரத்து இல்லாததாலும், அதன் வருகைகள் நாளுக்கு நாள் தாமதமாகிக் கொண்டே வருவதாலும் ஆஸ்திரேலியா மக்களை நாடு திருப்புவதில் கொஞ்சம் தொய்வு ஏற்பட்டு வருகிறது.Tasmania உள்ளிட்ட நாடுகளில் ,ஆஸ்திரேலியா மக்கள் அல்லது நியூசிலாந்து மிக எளிதாக ஊரடங்கு தேவைகளை பெறும் வகையில் Morrison பல்வேறு ஆலோசனைகளை வழங்கியுள்ளார்.

மேலும் அந்த ஆலோசனையில், அவர் கூறியதாவது,” நியூசிலாந்தில் இருந்து ஆஸ்திரேலியா வரும் மக்கள் 14 நாட்கள்
தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் உள்ளிட்டவைகளை எதையும் கடைபிடிக்க தேவையில்லை, நீங்கள் வழக்கம் போல் இயல்பாக இருக்கலாம்” என கூறியுள்ளார்.

இதைப்பற்றி நியூசிலாந்தின் பிரதமர் Jane Halton கூறுகையில், “ஆஸ்திரேலியா வரும் மக்கள் தனிமைப்படுத்திக் கொள்ள தேவையில்லை என்ற முக்கியமான விவாதத்தை வெள்ளிக்கிழமை அன்று நடந்த தேசிய கலந்தாய்வில் ஒரு முக்கிய நிகழ்வாக பேசப்பட்டுள்ளது” எனக் கூறியுள்ளார்.