Breaking News

ஆஸ்திரேலியாவும், ஜப்பானும் வரலாற்று சிறப்பு மிக்க ராணுவ ஒப்பந்தம் செய்ய தயாராகிறது !

ஜப்பானுடனான இந்த ராணுவ ஒப்பந்தம் இரு நாடுகளுக்கிடையே கவலை அளிப்பதாக இருக்கக்கூடாது என்று Prime Minister Scott Morrioson தெரிவித்தார்.

 இந்த ராணுவ ஒப்பந்தமானது  சீனாவுடன் மீண்டும் பரஸ்பரமான நன்மைகளை அளிக்கும் என Morrison அரசாங்கம் தன்னுடைய நிலைப்பாட்டை உறுதிப்படுத்தியுள்ளது. 

இந்த ஒப்பந்தமானது ஜப்பானுடனான முறிந்த உறவை மீண்டும் பரிசீலிக்கும் என தெரிகிறது . இந்த பரஸ்பர ஒப்பந்தனின் மூலமாக, கிழக்கு மற்றும் தெற்கு சீன கடலோரத்தில் ஆஸ்திரேலியா மற்றும் ஜப்பான் தங்களுடைய ராணுவ தளங்களை அமைத்து பயிற்சி மேற்கொள்வார்.

இந்த குறிப்பிடத்தக்க உறவு, நாட்டின் பகுதிகளுக்கிடையே எந்த பிரச்சனைகளையும் ஏற்படுத்தாது, மேலும் இது இரு நாடுகளிக்கிடையே நல்லதோர் நிலைப்பாட்டை உருவாக்கும், எனவே இந்த பகுதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட சீனா பயப்பட அவசியமில்லை என Prime Minister Scott Morrison தெரிவித்தார்.

  Tokyo-வில் இரு நாட்டு பிரதமர்களும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டபின், செய்தியாளர்களிடம் பேசிய திரு.Suga, இரு நாடுகளுக்கிடையே ஒற்றுமை, ஜனநாயகம், இறையாண்மைக்கு இரு நாடுகளும் இணைந்து செயல்படும் என தெரிவித்தார். 

மேலும் இரு நாட்டு தலைவர்களின் கூட்டறிக்கையில், கிழக்கு மற்றும் தெற்கு சீனக்கடல் பகுதியில் நிலவும் சூழ்நிலைகளுக்கும், அத்துமீறி ராணுவத்தளங்களை நிறுவியதற்கும் கடுமையான எதிர்ப்பை தெரிவித்திருந்தனர்.

மேலும் புதன்கிழமையன்று நடக்கவிருக்கும் வர்த்தக தலைவர்களுடனான சந்திப்பில், சீனாவுடனான வர்த்தக உறவை மீட்டெடுக்க Treasurer Josh Frydenberg முயற்சிகள் மேற்கொள்வார், அவரது இந்த முயற்சிகளுக்கு வர்த்தக அமைச்சர் Simon Birmingham ஊக்கமளிப்பார்.

  மேலும் அமைச்சர் கூறுகையில், Senator Birmingham  மற்றும் அவரது அமைச்சரவை பல மாதங்களாக சீன அரசால் புறக்கணிக்கப்பட்டு வருகிறார்கள். ஆஸ்திரேலியா சீன அதிகாரிகளுடன் மேல்மட்டம் வரை தொடர்பில் உள்ளது என அமைச்சர் கூறினார்.  

சாத்தியமான முயற்சிகளை நாங்கள் எடுக்கவில்லை என்று கூறுவது ஏற்றுக்கொள்ள முடியாதது என்று கூறினார். ஆஸ்திரேலியாவின் கதவுகள் திருந்திருந்த போதிலும் சீனாவை அவர்கள் நிர்பந்திக்கவில்லை.

கொரோனா வைரஸ், மனித உரிமை மீறல்கள், என குற்றசாட்டுகள் நிறைந்த காலகட்டத்தில் சீனா, ஆஸ்திரேலியா வர்த்தக ஏற்றுமதிக்கு எதிராக பல குறுக்கீடுகளை மேற்கொண்டது.

இதுபோன்ற கசப்பான பல அனுபவங்கள் இருந்த போதிலும், சீனா ஆஸ்திரேலியாவிடமிருந்து இறைச்சி, தானியங்கள், போன்ற வர்த்தக பரிமாற்றங்களை மேற்கொண்டு வருகிறது. வர்த்தகம் சார்ந்து சீனாவிற்கு நாங்கள் தேவைப்படுவது போல சீனாவும் நமக்கு தேவைப்படுவதாக Deputy Prime Minister Michael McCormack கூறினார்.