Breaking News

தெற்கு ஆஸ்திரேலியாவில் முதல் சுற்றாக ஆறு நாட்கள் முடக்கம் !

கொரோனா நோய் தொற்றை கட்டுப்படுத்தவும் , தீவிரமாக பரவாமல் தடுக்கவும் தெற்கு ஆஸ்திரேலியாவில் முதல் சுற்றாக ஆறு நாட்கள் முடக்க முடிவு எடுத்துள்ளனர்.

மாநிலங்களில் கட்டுப்பாடுகள் அறிமுகப்படுத்தப்பட்டது. நோய் தொற்று பரவாமல் கட்டுப்பாடு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று அறிவித்துள்ளனர்.

தெற்கு ஆஸ்திரேலியாவில் 22 பேருக்கு நோய் தொற்று கண்டறியப்பட்டுள்ளது ,ஆகவே ஆறு நாட்கள் முடக்கம் அறிவிக்கப்பட்டது.

குடியிருப்பவர்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் கிடைக்கும் என்றும் அறிவித்துள்ளனர்.பள்ளிகள், பல்கலைக்கழகங்கள் ,pubs, உணவகங்கள், சிற்றுண்டி சாலை வழங்குபவர்கள் எல்லாம் மூடப்படும் என்று Premier கூறியுள்ளார்.

திருமண விழாக்கள், இறுதி சடங்கு, பிராந்திய பயணம், வெளிப்புற விளையாட்டு முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது.ஆறு நாட்கள் முடக்கத்தில் என்னென்ன செய்ய வேண்டும் ,செய்ய கூடாது என்று அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.

முற்றிலும் மோசமான சூழ்நிலை நிலவுவதால் எல்லோரும் சமூக இடைவெளியை கடைபிடிக்க வலியுறுத்தப்பட்டுள்ளனர் .சமுதாயத்தை காப்புற்றுங்கள் என்று Premier Steven Marshall கூறியுள்ளார்.நம்முடைய மாநிலத்தில் எல்லாவிதமான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

Adelaide வடக்கில் 22 நோய் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இறுதி கட்டமாக நிறைய கட்டுப்பாடுகள் தீர்மானிக்க அதிகாரிகள் செயல்படுகின்றனர்.

ஆறு நாட்களை தொடர்ந்து கட்டுப்பாடுகள் நிறைந்த 8 நாட்கள் முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது என்று போலிஸ் கமிஷ்னர் தெரிவித்தார்.

புதன்கிழமை அன்று இரண்டு புதிய நோய் தொற்று கண்டறியப்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை உயர் அதிகாரி Nicola Spurrier கூறியுள்ளார்.

நோய் தொற்று அறிகுறிகள் அறியப்படாமலே பலருக்கும் நோய் தொற்று மக்களிடையே பரவியுள்ளது என்று அவர் தெளிவுபடுத்தினார்.
Premier Gladys Berejikilan தன்னுடைய மாநில மக்கள் தெற்கு ஆஸ்திரேலியாவுக்கு பயணிக்க வேண்டாம் என்று கூறியுள்ளார்.

Victoria-வில் யாரும் தெற்கு ஆஸ்திரேலியாவுக்கு பயணிக்க வேண்டாம் என்று Premier Daniel Andrews கேட்டு கொண்டார்.ஆனால் ஆஸ்திரேலியர்களை வேலைகளுக்கு திரும்பும் படி கேட்டுக் கொள்கிறேன். அந்த எல்லைகள் திறக்கப்படும் என்று அறிவித்தார்.