Breaking News

ஆஸ்திரேலியாவில் பயங்கரவாதத்தை ஆராய பாராளுமன்ற விசாரணை குழு அமைப்பு !

அதிகரித்துவரும் right-wing பயங்கரவாத அச்சுறுத்தல் உட்பட ஆஸ்திரேலியாவில் காணப்படும் அனைத்து வகையான பயங்கரவாத நடவடிக்கைகளை ஆராய பாராளுமன்ற கூட்டுக் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. உள்துறை அமைச்சர் Peter Dutton பரிந்துரைக்கும் பின், இந்தப் பயங்கரவாதத்தினால் ஏற்படும் பிரச்சனைகளை விசாரிக்க, உளவுத்துறை மற்றும் பாதுகாப்பு தொடர்பான பாராளுமன்ற கூட்டுக்குழு கையெழுத்திட்டுள்ளது.

right-wing பயங்கரவாதத்தினால் அதிகரித்துவரும் அச்சுறுத்தலுக்கு எதிராக ஆஸ்திரேலியா எந்த அளவில் தயார் நிலையில் உள்ளது என்பதை ஆய்வு செய்ய, Labor’s Home Affairs spokesperson Kristina Keneally பாராளுமன்றத்தில் குரல் கொடுத்ததினால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பயங்கரவாதத்தினால் அதிகரித்துவரும் அச்சுறுத்தல் தேசிய பாதுகாப்பு அமைப்பின் அறிவுரையை ஏற்றுக் கொள்ள வைத்ததாக Senator Keneally செய்தியாளர்களிடம் தெரிவித்தார். ஆஸ்திரேலியா மக்களை பாதுகாப்பாக வைத்திருப்பது பாராளுமன்றத்தின் கடமையாகும் என்றும் அவர் தெரிவித்தார்.

ஆஸ்திரேலியாவில் பயங்கரவாத எண்ணங்கள் உடைய நபர்கள் மற்றும் பயங்கரவாத நடவடிக்கைகளால் ஏற்படும் அச்சுறுத்தலின் தன்மை அனைத்தையும் இந்த குழு ஆராயும் என்று குழு தலைவர் மற்றும் Liberal MP Andrew Hastie தெரிவித்தார். அனைத்து வகை பயங்கரவாதத்தினால் ஏற்படும் வன்முறைகள் மற்றும் பயங்கரவாதிகளின் நோக்கம் மற்றும் காரணங்களை பற்றி இந்த குழு ஆராயும்.

இந்த கொரோனா பரவல் காலத்திலும், இந்த பயங்கரவாத குழுக்கள் புதிய உறுப்பினர்களை சேர்ப்பதிலும் தங்களுடைய சித்தாந்தத்தை முன்னெடுத்துச் செல்வதிலும், இந்த நெருக்கடியான சூழ்நிலையை பயன்படுத்தியதை பற்றியும் இந்த குழு ஆராயும்.

ஆஸ்திரேலியாவில் பல பகுதிகளில் பரவியிருக்கும் பயங்கரவாதிகளை பற்றியும் சர்வதேச அமைப்புகளுடன் அவர்களுடைய தொடர்பு பற்றியும் இந்த குழு தீவிரமாக ஆராய்ச்சி செய்யும்.

தற்போது அதிகரித்து வரும் பயங்கரவாத அச்சுறுத்தல்களை சீர்செய்ய காமன்வெல்த் பயங்கரவாத சட்டத்தில் என்ன மாதிரியான மாற்றங்களை கொண்டு வரலாம் என்பதை பற்றியும் இந்த குழு உற்றுநோக்கும்.

right-wing பயங்கரவாத மற்றும் பிற பயங்கரவாதக் குழுக்களுக்கு இடையே வித்தியாசங்களை அறிந்திருப்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்று Labor MP Anne Aly தெரிவித்தார். இந்த பயங்கரவாத குழுக்கள் ஆஸ்திரேலியாக்கு மிக பெரிய அச்சுறுத்தலாக இருக்கின்றன என்பது அனைவருக்கும் தெரிந்தது என்றும் அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

பல இளைஞர்களை இவர்கள் தீவிரவாத குழுக்களில் இணைத்து வருகிறார் என்பதும் தெரிந்த ஒன்றாகும். இந்த பயங்கரவாத குழுக்கள் தங்கள் தொடர்புகளையும் விரிவுபடுத்த சமூக வலைத்தளங்களை எவ்வாறு பயன்படுத்துகின்றனர் பயன்படுத்துகின்றனர் என்பதை பற்றியும் இந்த விசாரணைக் குழு ஆய்வு செய்யும். வெறுப்பு பேச்சை தடுப்பதற்கான வழிமுறைகள் மற்றும் பயங்கரவாத கருத்துக்களை தடுப்பதற்காக, ஆஸ்திரேலியாவின் தயார் நிலையை பற்றியும் இந்த குழு ஆய்வு செய்யும்.

அதிகரித்து வரும் right-wing பயங்கரவாதத்தின் அச்சுறுத்தல்:

எந்த ஒரு right-wing பயங்கரவாத குழுவும், தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பாக ஆஸ்திரேலியாவில் பட்டியலிடப்படவில்லை. இருந்தாலும் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் 40% பயங்கரவாதத்திற்க்கு, இந்த அமைப்பின் பயங்கரவாத குழுவோடு தொடர்பு உள்ளது என்று ஆஸ்திரேலிய பாதுகாப்பு மற்றும் உளவுத் துறை அமைப்பு தெரிவித்துள்ளது.

right-wing பயங்கரவாதத்தின் மீதான நடவடிக்கை மெல்ல மெல்ல அதிகரித்து வருவதாக ஆஸ்திரேலிய Federal போலீஸ் கமிஷனர் Reece Kershaw தெரிவித்துள்ளார். கடந்த புதன் கிழமை அன்று, அதிக உயிர் சேதம் விளைவிக்கும் ஒரு பயங்கரவாத தாக்குதலை நடத்த முயற்சிப்பதாக 18 வயது நிரம்பிய NSW -வை சேர்ந்த மனிதர் கைது செய்யப்பட்டுள்ளார். வெடிகுண்டு தயாரிப்பதற்கான பொருட்களை பற்றியும், பயங்கரவாத பிரச்சனைகளைப் பற்றியும் சமூக வலைத்தளங்களில் இவர் விவாதித்து வந்துள்ளார் என்று கூறப்படுகின்றது.