Breaking News

ஆஸ்திரேலியாவின் மனித உரிமைப் பதிவு ஐக்கிய நாடுகள் சபையில் ‘தீவிர ஆய்வுக்கு’ உட்படுத்தப்படும் !

தஞ்சம் தேடுவோர் மற்றும் அகதிகளுக்கான உள்நாட்டு சிறைவாச விகிதங்கள் மற்றும் கொள்கைகளை குறைப்பதில் முன்னேற்றம் இல்லாதது குறித்து ஐக்கிய நாடுகள், ஆஸ்திரேலியாவை கேள்வி எழுப்ப உள்ளன.

ஆஸ்திரேலியாவின் மனித உரிமைகள் தொடர்பான பதிவுகள் ஐக்கிய நாடுகள் சபையின் விசாரணையில் உள்ள நிலையில், பழங்குடி ஆஸ்திரேலியர்கள் எதிர்கொள்ளும் ஏற்றத்தாழ்வுகள் குறித்தும் கவனம் செலுத்தப்படும் என கூறப்படுகிறது. ஜெனீவாவில் உள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் ஒவ்வொரு 5 ஆண்டுகளுக்கும் ஆஸ்திரேலியாவிடம் உலகலாவிய கால ஆய்வு குறித்து கேள்வி கேட்கப்படும்.

இந்த விசாரணை புதன்கிழமை இரவு நடைபெற உள்ள நிலையில், ஆஸ்திரேலியா பல மனித உரிமைகள் தொடர்பான பிரச்சனைகளை குறித்து தீவிர ஆய்வை எதிர்கொள்ள வேண்டும் என மனித உரிமைகள் சட்ட மையத்தின் நிர்வாக இயக்குனர் Hugh De Kretser கூறியுள்ளார். மேலும் “ஒரு வசதியான, நிலையான ஜனநாயகம் என்ற வகையில், மனித உரிமைகள் குறித்து ஆஸ்திரேலியா உலகை வழிநடத்தக்கூடும், ஆனால் பெரும்பாலும் முக்கியமான பகுதிகளில் மக்களின் மனித உரிமைகளை மதிக்க ஆஸ்திரேலிய அரசாங்கம் தவறிவிடுகின்றன,” என்றும் அவர் கூறினார்.

Sweden, Uruguay மற்றும் Czech Republic உட்பட பல நாடுகள் ஆஸ்திரேலிய சிறைகளில் உள்ள பழங்குடியினர் மற்றும் Torres Strait தீவுவாசிகளின் பிரதிநிதித்துவம் குறித்து முன்கூட்டியே கேள்விகளை எழுப்பியுள்ளன.இதேபோல சிறார் நீதி அமைப்பில் இருக்கும் சில நடைமுறைகள் பார்க்கும் போது கவலை அளிப்பதாக முன்கூட்டிய போலந்து-ம் எழுதியுள்ளார்.

மேலும் குற்றவியல் வழக்கின் குறைந்த வயது, தனிமைப்படுத்தப்பட்ட அதிக காலம், குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கான ஒருங்கிணைந்த தடுப்பு இடங்கள் ஆகியவையும் இதில் அடங்கும். இதில் முக்கியமாக கிரிமினல் வழக்கின் வயதை 10 முதல் குறைந்தது 14 ஆண்டுகளாக உயர்த்துவதில் இருந்து அரசாங்கங்கள் தடுத்திருப்பது குறித்தும் ஆஸ்திரேலியா கேள்வி எழுப்பியுள்ளது. இது குறித்த முடிவை கடந்த ஆண்டு அட்டர்னி ஜெனரல் கவுன்சில் தள்ளி வைத்தது, வயதை உயர்த்துவது குறித்து கூடுதல் பணிகள் தேவை என்றும் அவர் கூறினார்.

மக்கள் எதிர்கொள்ளும் மனித உரிமைகள் தொடர்பான பிரச்சினைகளுக்கு ஆஸ்திரேலிய அரசாங்கத்தை பொறுப்பேற்க ஐ.நா.வின் மறுஆய்வு தேவை என நாட்சில்ஸ் இணைத் தலைவர் பிரிஸ்கில்லா அட்கின்ஸ் கூறியுள்ளார். மேலும் “எங்கள் மக்கள் தொடர்ந்து பாரபட்சமான கொள்கைகள், இனவெறி தாக்குதல், அதிகப்படியான காவல், மனித உரிமை மீறல்கள் மற்றும் காவலில் வைக்கப்பட்டு ஏற்படும் இறப்புகள் என பல அநீதிகளை அனுபவிக்கின்றனர்,” என்றும் அவர் கூறினார்.

காவலில் இருந்தபோது இறந்த 432 பழங்குடி மக்கள் குறித்தும், பழங்குடி ஆஸ்திரேலியர்களுக்கு எதிரான “முறையான காவலர்களின் மிருகத்தனத்தை” நிவர்த்தி செய்ய என்ன செய்யப்படும் என ஈரான்-ம் கேள்வி கேட்கும் என தெரிகிறது. இதனிடையே ஆஸ்திரேலியா சமர்ப்பித்த மறு ஆய்வில், ஆஸ்திரேலிய அரசாங்கம் மக்கள் எதிர்கொள்ளும் ஏற்றத்தாழ்வுகளுக்கு தீர்வு காண “சிறப்பாகச் செய்ய வேண்டியதன் அவசியத்தை” ஒப்புக் கொண்டதாகக் கூறியுள்ளது.

மேலும், குடும்ப வன்முறை, மனித கடத்தல் மற்றும் நவீன அடிமைத்தனம் மற்றும் ஒரே பாலின திருமணத்தை சட்டப்பூர்வமாக்குதல் ஆகியவற்றில் குறிப்பிடத்தக்க முதலீடுகள் இதில் அடங்கும்” என்றும் சமர்ப்பித்துள்ளது.ஆஸ்திரேலியா முழுவதும் மனித உரிமைகளைப் பாதுகாப்பதில் COVID-19 புதிய சவால்களை முன் வைக்கிறது எனவும் ஆஸ்திரேலிய அரசாங்கம் கூறியது. ஆனால் இந்த கவலைகளுக்கு தீர்வு காணும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதில் குறிப்பாக தனித்துவமான பாதிப்புகளைக் கொண்ட மக்களின் உரிமைகளுக்கு கவனம் செலுத்தப்பட்டுள்ளது,” என்றும் அரசாங்கத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.